tamilnadu

img

எஸ்.டி. சான்றிதழ் கேட்டு பழங்குடியின மக்கள் மதுரை ஆட்சியரகத்தில் ஆவேசப் போராட்டம்

மதுரை, ஜன.30-   மதுரை மாவட்டம் பரவை சத்தியமூர்த்தி நகரில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு எஸ்.டி.இனச்சான்றிதழ் வழங்க வேண்டும். பெற்றோருக்கு எஸ்.டி.இனச் சான்றிதழ் இருந் தால் பிள்ளைகளுக்கும் அரசின் விதிப்படி அதே இனச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழனன்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு தலைமை வகித்தார்.  கல்வி உதவித் தொகை, அரசு சலுகை, அரசு வேலைகளுக்கு இணைய வழி இனச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அட்டை இனச் சான்றிதழ்  உள்ள அனை வருக்கும் இணைய வழி இனச் சான்றிதழ் வழங்க வேண்டும். இணைய வழி  இனச் சான்றிதழ் பெற விதிமுறைகளை எளிதாக்கி இனச் சான்றிதழ் உடனே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த ஆண்டு நவம்பரில்  14 நாட்கள் காத்திருப்புப் போராட்டமும் 45 நாட்கள் பள்ளி புறக்கணிப்புப் போராட்டமும் நடத்தினர். ஆனால் இதுவரை இனச் சான்றிதழ் வழங்கவில்லை.  எனவே உடனடியாக இனச் சான்றிதழ் (ST) வழங்கும் வரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பரவை 2பிட் சத்தியமூர்த்தி நகர் கிராம மக்கள் சார்பில் இந்த காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர்  எஸ்.பாலா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மதுரை மாவட்டச் செயலாளர் எஸ்.பி. இளங்கோவன், மதுரை மாநகராட்சி துணை  மேயர் தி.நாகராஜன், சிபிஎம் மதுரை மேற்கு  ஒன்றியச் செயலாளர் ம.தனபாலன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி.மலர்விழி, எஸ்.சரஸ் வதி, மேற்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.பாண்டியன், கே.முருகேசன், எம்.முருகன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் அஜய், சத்தியமூர்த்தி நகர் காட்டுநாயக்கன் சமுதாய தலைவர் பி.வீராங்கன், செயலாளர் எஸ்.மாரியப்பன், பொருளாளர் கே.கண்ணன், துணைத் தலைவர் எம்.கருப்பையா,  துணைச் செயலா ளர் என்.மணிவாசகன் ஆகியோர் உட்பட சத்திய மூர்த்தி நகர் காட்டுநாயக்கன் சமூக மக்கள், 200 பள்ளிக் குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், சங்கத் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆட்சியரிடம் ஒரு மணி நேரத்திற் கும் மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. 

பி.டில்லிபாபு பேட்டி

ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு பின்னர்  டில்லிபாபு செய்தியாளர்களிடம் கூறுகை யில், காட்டுநாயக்கன் சமூக மக்கள், மலை வேடன் மக்கள் ஆகியோருக்கு  இனச் சான்றிதழ் வழங்கக்கோரி காத்திருப்புப் போராட்டம் நடத்தினோம். சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளதாகவும் இந்த குழு விரைவில் விசாரணை நடத்த  உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள் ளார். விண்ணப்பித்த 32 விண்ணப்பங்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்க விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் இருந்து ஐந்து பேர் கொண்ட குழு வரு கிறது. அந்த குழு விரைவாக விசாரணை நடத்தி சான்றிதழ் வழங்குவதாக ஆட்சியர் தெரி வித்தார். வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி  32 மனுக்களை நிராகரித்துள்ளார். அதன் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றோம். 15 தினங்களில் விசாரணை செய்து  நல்ல முடிவாக தெரிவிக்கிறேன் என்றார்.  அரசாணையை மதிக்காத மதுரை வருவாய்க் கோட்டாட்சியர் குறித்து தலைமைச் செயலகத் திலும் உள்துறை செயலகத்திலும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பாக  முறை யிட உள்ளோம். தேவைப்பட்டால் உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடர்வோம். இரண்டு ஆண்டு காலமாக பழங்குடியின மாணவர் களுக்கு உதவித்தொகை  கிடைக்கவில்லை. அரசாணை எண் 104 இன் படி சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். ஆய்வு கமிட்டி 15 நாட்களில் விசாரணை நடத்த உள்ளதாக ஆட்சியர் கூறி யுள்ளதாக டில்லிபாபு தெரிவித்தார். 

போராட்டம் தொடரும் 

அவர் மேலும் கூறுகையில், சாதிச்சான்றிதழ் கிடைக்கும் வரை போராட்டம் நடைபெறும். சாதிச் சான்றிதழ் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட் டோர்- பழங்குடியினர் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசிடம் புகார் தெரிவிக்க முடிவு செய்துள்ளோம் என கூறினார்.  மாலை வரை போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட காட்டுநாயக்கன் இன மக்கள் பாரம்பரிய பாடல்களுக்கு  ஏற்றவாறு நடனம் ஆடினர்.