tamilnadu

img

வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கும் மோடி அரசு

ஆர்.சச்சிதானந்தம்  எம்.பி., சாடல்  சின்னாளபட்டி, ஜன.30 - நூறு நாள் வேலைத்திட்டத்தை முடக்கி வேலையில்லாத் திண்டாட்டத்  தை மோடி அரசு உருவாக்க நினைக் கிறது என்று ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., சாடியுள்ளார். தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தை முடக்க முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் வேலைத்திட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். இத்திட்ட பணியாளர் களுக்கு தினசரி கூலியாக ரூ.314 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி யும் அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் பி.சுரேஷ், ஒன்றியத் தலை வர் எ.சீராளன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர்  ஆர்.சச்சிதானந்தம் பேசுகையில்,   நூறு நாள் வேலைத் திட்டத்தை முடக்கினால் கிராமங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் உரு வாகிவிடும். தமிழக அரசு தமிழகத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தை பாது காக்க நினைக்கிறது. அதனால் தான் ஒன்றிய அரசு முறையாக நிதி  வழங்கா விட்டாலும் தமிழக அரசு நூறு நாள் வேலைத்திட்டத்தை நிறுத்தாமல் நடத்தி வருகிறது. ஆனால் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசோ தமிழகத்தில் நூறு நாள் திட்டத்தை முடக்கி கிராமங்களில் வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்க நினைக்கிறது. வரும் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு முறையான நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்றார். அதன்பின்னர் நூறு நாள் வேலை கோரி விண்ணப்பித்த மனுக்களை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்கலாவதியிடம் அளித்தனர்.   ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்டச் செயலாளர் கே.அருள்செல்வன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.