states

img

நாடு முழுவதும் அரியவகை கனிமங்களை வெட்டியெடுக்க ரூ.34,300 கோடி ஒதுக்கீடு ஒன்றிய அமைச்சரவை புது முடிவு

நாடு முழுவதும் அரிய வகைக் கனிமவளங்களை வெட்டியெ டுக்கும் தேசிய அரியவகை கனிமங்கள் திட்டத்து க்கு (என்சிஎம்எம்) பிர தமர் மோடி தலைமை யிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்பு தல் அளித்துள்ளது. இதற்காக ரூ.34,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அமைச்சரவை முடிவின் விவரம்: நாடு முழுவதும் அரிய வகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் தேசிய  அரியவகை கனிமங்கள் திட்டத்துக்கு (என்சிஎம்எம்) ரூ.34,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கனிமங்களை வெட்டியெடுப்பது அது தொடர்பாக ஆய்வுகள் தேசிய இயக்கமாக நடத்தப் படும். இதில் ஒன்றிய அரசின் பங்களிப் பாக ரூ.16,300 கோடியும், பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடாக ரூ.18,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த இயக்கத்தின் மூலம், கனிமங்க ளின் ஆய்வுகளை மேம்படுத்தப்படும், தாதுக்களுக்கான சுரங்கம் அமைக் கப்படும், இறக்குமதியை சார்ந்திருப்பது குறைக்கப்படும், முக்கியக் கனிமங்கள் மற்றும் அவற்றின் மறுசுழற்சியை மேற் கொள்வதற்கான தொழில்நுட்பங்கள்  மேம்படுத்தப்படும் என்று கூறியுள்ளது.  இந்தத்  திட்டம், நிலப் பரப்பில் மட்டு மின்றி கடல் பரப்பிலும்  மேற்கொள்ளப் பட உள்ளது. அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து விரைவில் அடுத்த கட்டப் பணிகள் மேற்கொள்ளப் படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் (ஜிஎஸ்ஐ) கடந்த மூன்று ஆண்டுகளில் அரியவகை கனிமங்கள் தொடர்பாக 368 ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டது. 2024-25-ஆம் நிதியாண்டில் 195 திட்டங்க ளுக்கான பணிகள்  நடைபெற்று வரு கின்றன. 2025-26 நிதியாண்டில் அரிய வகை கனிமங்கள் தொடர்பாக 227 திட்டங்களை இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. எனத் தெரிவித்துள்ளது. ஆனால் எந்தெந்த மாநிலங்களில் எந்த வகையான கனி மங்கள் வெட்டியெடுக்கப்படும் என்பதை தெரிவிக்காமல் ரகசியம் காக்கப் பட்டுள்ளது.