states

அரசு ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பும் டிரம்ப்

வாஷிங்டன் 2025 பிப்ரவரி மாதத்திற் குள் அரசு ஊழியர் கள் வேலையை விட்டுச் செல்லலாம் அவர்களுக்கு செப்டம்பர் மாதம் வரையிலான ஊதி யம் கிடைக்கும் என டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்ப்பின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களை வேலையை விட்டு வெளியேறத் தூண்டும் மோசமான தொழிலாளர் விரோத நடவடிக்கை என அமெரிக்காவின் மிகப்பெரிய தொ ழிற்சங்கமான அரசாங்க ஊழியர்க ளின் அமெரிக்க கூட்டமைப்பு (AFGE) கண்டித்துள்ளது.   டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியா னவுடன் வீட்டில் இருந்து பணி யாற்றும் அரசு ஊழியர்களை அலுவ லகம் வந்து பணியாற்ற வேண்டும் எனவும் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணியாற்ற தொழி லாளர்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகையை ரத்து செய்யப்போவ தாகவும் அறிவித்தார். இதன் அடிப்படையில் பிப்ரவரி மாதம் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும். இதற்கு விருப்பம் இல்லையென்றால் பிப்ரவரி 6 ஆம் நாள் முதல் “ராஜினாமா திட்டத்தின்” கீழ் ராஜினாமா செய்து கொள்ளுங் கள் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள் ளது. இவர்களுக்கு 2025  செப்டம்பர் 30 வரையிலான மாதங்களுக்கு  முழு சம்பளமும் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜினாமா செய்யும் தொழி லாளர்கள் வேலை செய்ய தேவை இல்லை எனவும் அவர்கள் நிர்வாக விடுப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ராஜி னாமா சலுகை ராணுவம், அமெரிக்க தபால் சேவை, குடியேற்ற அமலாக் கத்துறை, தேசிய பாதுகாப்பு தொ டர்புடைய அமைப்புகள் உள்ளிட்ட வற்றில் பணியாற்றுபவர்களுக்கு கிடையாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.  அமெரிக்க அரசுத்துறையில் சுமார்  20 லட்சம் தொழிலாளர்கள்  வேலை யில் உள்ளனர். இந்த அறிவிப்புக்கு பிறகு சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் (சுமார் 10 சதவீத தொழிலாளர்கள்) ராஜினாமா செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க அரசுத்துறைகளில் மொத்தமுள்ள தொழிலாளர்களில் வெறும்  6 சதவீத நபர்கள் மட்டுமே  நேரடியாக அலுவலகத்திற்கு வந்து  முழுநேர வேலை செய்கிறார்கள் என நிர்வாகம் வாதிடுகின்றது. ஆனால் 2024  ஆகஸ்ட் மாதமே 54 சதவீத தொழி லாளர்கள்  அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற துவங்கியுள்ளதாக  அமெரிக்காவின் மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலகம் தெரி வித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  இது மட்டுமின்றி  46 சதவீத தொழிலாளர்கள்  சில நாட்கள் வீட்டி லும் சில நாட்கள் அலுவலகத்திற்கு சென்றும் பணியாற்றுவதாகவும், சராசரியாக அவர்களது வேலை நேரத்தில் 61 சதவீதம் அலுவலகத்தில் செலவிடுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.  10 சதவீத தொழிலாளர் கள் மட்டுமே முழுமையாக வீட்டில் இருந்து பணியாற்றுகின்றனர். தொழிற்சங்கம் கண்டனம் அரசாங்க ஊழியர்களின் அமெ ரிக்க கூட்டமைப்பு (AFGE) தொழிற் சங்கம் டிரம்பின் இந்த தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்துள் ளது. இக்கூட்டமைப்பின் தேசியத் தலைவர் எவரெட் கெல்லி  பேசிய போது, அர்ப்பணிப்புள்ள அரசு ஊழி யர்களை வேலையில் இருந்து நீக்கு வது எதிர்பாராத மோசமான விளைவு களை ஏற்படுத்தும். இது  அமெரிக்க அரசை நம்பியிருக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு பயங்கரமான குழப் பத்தை ஏற்படுத்தும். இந்த கொள்கை உண்மையிலேயே அமெரிக்கர்களின் நலனுக்கானது அல்ல என கடுமை யாக விமர்சித்துள்ளார். வெளி நாடுகளுக்கு அமெரிக்கா செய்து வரும் உதவியை நிறுத்து வதாக அறிவித்த பிறகு சர்வதேச வளர்ச்சிக்கான நிறுவன துறையில்  பணியாற்றி வந்த சுமார் 400 தொழிலாளர்களையும் வேலையை விட்டு நீக்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.