states

img

மும்பை புனேவில் குய்லின்-பார்ரே தொற்றுக்கு 2ஆவது பலி சிகிச்சையில் 121 பேர்

மகாராஷ்டிரா மாநிலம் புனே சுற்று வட்டாரப் பகுதியில் குய்லின்-பார்ரே தொற்று  (ஜிபிஎஸ்)  வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை புனேவில் மொத்த குய்லின்-பார்ரே நோய் தொற்று வழக்குகளின் எண்ணிக்கை 101ஆக அதிகரித்தது. புனே அருகே சோலாப்பூரில் 40 வயதுமிக்க ஒருவர் குய்லின்-பார்ரே தொற்றுக்குப் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், புனேவின் புறநகர் பகுதியான சின்ஹாகாட் சாலையைச் சேர்ந்த 56 வயது பெண் குய்லின்-பார்ரே நோய் தொற்றுக்கு  பலியாகியுள்ளார்.  புனேவில் குய்லின்-பார்ரே தொற்றுக்கு 2ஆவது பலியாகும். அதே போல புனே மண்டலத்தில் நோய் பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த எண்ணிக்கை 127  ஆக உயர்ந்துள்ளது.