ஊழலை முடிவுக்குக் கொண்டு வருவேன், யமுனையை சுத்தம் செய்து அந்த நீரை குடிப்பேன் என்று சபதம் செய்தவர், இப்போது மிகப்பெரிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிக்கி இருக்கிறார். பிரதமர் மோடி பொய் சொல்வது போல, கெஜ்ரிவாலும் பொய் சொல்கிறார். பொய் சொல்வதில் இருவருக்கும் இடையே அதிக வித்தியாசம் இல்லை.
தில்லியில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக களமிறங்கவில்லை. ஆம் ஆத்மியை தோற்கடிக்கவே போட்டியிடுகிறது. காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுக்கு எதிராக எதுவும் பேசுவதில்லை. அதற்கு இதுதான் சாட்சி.
கும்பமேளாவில் நடக்கக் கூடாதது நடந்து விட்டது. இந்த விபத்து தொடர்பாக பல்வேறு சாக்கு சொல்லலாம். ஆனால் 30 பேர் பலியானது மிகவும் மோசமானது.
கும்பமேளாவிற்காக ரூ.10,000 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தோம். செலவின் மடங்கு பிரம்மாண்டமாக இருந்தும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தது வருத்த மளிக்கிறது. கும்பமேளாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பிற மாநிலங்களில் இருந்து கும்பமேளாவிற்கு வந்த குடும்பங்களுக்கு உயிரிழப்பு எண்ணிக்கையை சொல்லி உதவுவது அரசின் கடமை.