லண்டனில் உள்ள கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, ஒரு வார பயணமாக முதலமைச்சர் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தில் தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.
முதலமைச்சர் இன்று அம்பேத்கர் லண்டனில் கல்வி பயின்றபோது அவர் தங்கியிருந்த இல்லத்தை நேரில் பார்வையிட்டார். அதன்பின், கார்ல் மார்க்ஸ் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
“தத்துவஞானிகள் இதுவரை உலகைப் பல வகைகளில் விளக்கியுள்ளனர்; ஆனால் நோக்கம் என்பது அதனை மாற்றுவதுதான்.
உழைக்கும் வர்க்கத்துக்கு ஒளி வழங்கிய சிவப்புச் சூரியனாம் மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் செவ்வணக்கம் செலுத்தினேன்!” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.