கொழும்பு அருகே பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 பயணிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை, கொழும்பு அருகே வெல்லவாயா பகுதியில் நேற்று இரவு 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 1000 அடி பள்ளதில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநரின் அதிவேகம் தான் விபத்துக்கு காரணமாக இருந்தது என தெரியவந்துள்ளது.