states

இன்று 13 தொழில் நகரங்களில் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சென்னை, செப். 4 - 50 சதவிகித வரிவிதிப்பு மூலம் இந்தியா மீது அமெரிக்க துவங்கியுள்ள வர்த்தக போரைக் கண்டித்தும், நாட்டின் சுயசார்புக் கொள்கை, ஏற்றுமதித் தொழில் களைப் பாதுகாக்கவும், தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) அன்று தமிழகத்தின் தொழில் நகரங்களில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னை, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, ஓசூர், வேலூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, விருதுநகர், தூத்துக்குடி, திண்டுக்கல், கரூர்  உள்ளிட்ட 13 தொழில் நகரங்களில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனி னிஸ்ட்) விடுதலை ஆகிய இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் - ஊழியர்கள் மற்றும் பல்வேறு பகுதி பொதுமக்கள் பங்கேற்கின்றனர்.