2 கோடி தொலைபேசி எண்கள் முடக்கம்
நாட்டில் 2 கோடிக்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களை முடக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய தொலைத்தொடர்பு துறையின் செயலா ளர் நீரஜ் மிட்டல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோவா தலைநகர் பனாஜி யில் நடைபெற்ற பாதுகாப்பு விஷயங்கள் குறித்த வருடாந்திர மண்டல மாநாட்டில் காணொலி காட்சி மூலம் அவர் மேலும் கூறுகையில்,”நிதி நிறுவனங்கள் தக வல்களை திரட்டவும், நிதி மோசடியை புகார் அளிக்கவும் அனுமதிக்கும் டிஜிட் டல் நுண்ணறிவு தளத்தை தொலைத் தொடர்பு துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. இந்த தளம் சைபர் பாது காப்பான சூழலை முன்கூட்டியே உரு வாக்க உதவும். தற்போதைய சூழலில் இணையதளம் மூலம் ஏமாற்று அழைப்பு கள் 97% குறைந்திருக்கின்றன. இதற்கு காரணம் 2 கோடி தொலைபேசி எண்கள் முடக்கப்பட்டதே காரணம்” என அவர் கூறியுள்ளார்.