விநாயகர் சதுர்த்தி விழா: வைரலாகும் மதநல்லிணக்க வீடியோ
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 27ஆம் தேதி கொண்டப்பட்டது. இந்த நிகழ்வை முன்னிட்டு தமிழ்நாடு மாநிலம் கிருஷ்ணகிரியில் முஸ்லிம் மக்கள் விநாயகர் சிலை, பூஜைப் பொருட்கள், பழங்களை இந்து மக்களின் வீடுகளுக்கே கொடுத்து மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர். அதே போல மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, முஸ்லிம் மக்களின் இறுதி சடங்கு ஊர்வலத்திற்கு இந்து மக்கள் வழிவிட்ட நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்தது. இந்த இரண்டு மதநல்லிணக்க நிகழ்வுகளும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் கிருஷ்ணகிரி மதநல்லிணக்க நிகழ்வு 10 நாட்களுக்கு மேலாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.