tamilnadu

img

தூத்துக்குடியில் பாஜக குண்டர்கள் அராஜகம் - சிபிஎம் கண்டனம்!

மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி தூத்துக்குடியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதற்கு சிபிஎம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சிஐடியு, விதொச, தவிச உள்ளிட்ட சங்கத்தின் சார்பில் மதவெறி, சாதிவெறிக்கு எதிராக மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி செப்டம்பர் 5, 6 ஆகிய இரண்டு நாட்கள் பிரச்சார இயக்கம் நடத்த  காவல்துறையிடம் உரிய அனுமதி பெற்று இன்றைய தினம் பிரச்சார இயக்கம் ஒட்டப்பிடாரம் வ.உ.சி இல்லத்திலிருந்து துவங்கியது.
தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு மக்கள் ஒற்றுமை குறித்து தோழர்கள் பேசிக் கொண்டிருந்தபோது பிரச்சாரத்தைச் சீர்குலைக்கும் விதமாக சனாதனம், இந்துத்துவம், ஜாதி வெறிக்கு எதிராகப்‌ பேசக் கூடாது எனக்கூறி பாஜகவை சேர்ந்த குண்டர்கள் தோழர்கள் மீது தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.
இத்தகைய கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட சொக்கலிங்கம், ராஜேஷ்கனி, சுந்தர், சிவராமன், உள்ளிட்ட பாஜக ரவுடி கும்பலை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.