ஆப்கானிஸ்தானில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி, அந்நாட்டில் ரிக்டர் அளவுகோலில் 6.0 அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தாக்கத்தால் பல்லாயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து மண்ணில் புதைந்தன. இதுவரை சுமார் 2,200 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு ஏற்பட்ட நில அதிர்வுக்கு பின்னர், இன்று காலை மீண்டும் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் அதிர்வுகள் ஜம்மு-காஷ்மீர், டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்நாட்டின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.