தமிழ்நாட்டில் முதலீடு செய்ய இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு
சென்னை, செப்.7- தமிழ்நாட்டில் முதலீடு செய்ய இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டுக்கு முதலீடு களை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சுற்றுப் பயணம் மேற் கொண்டார். லண்டனில் நடைபெற்ற இங்கிலாந்து வாழ் தமி ழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உரையாற்றிய போது, “தமிழர்கள் எங்கே சென்றா லும் நமது மொழி, பண்பாடு, சுயமரியாதை, சமத்துவ எண்ணம், சமூக நீதி கோட் பாட்டை விடமாட்டோம். தமிழ்நாட்டின் பெருமையை எடுத்துச் சொல்கிற தூது வர்களாக இங்கிலாந்து வாழ் தமிழர்கள் திகழ்கின்றனர்” என்று அவர் தெரிவித்தார். “இங்கிலாந்து வாழ் தமி ழர்கள் தமிழ்நாட்டின் அதி காரப்பூர்வமற்ற தூதுவர்கள் என்று குறிப்பிட்ட முதல மைச்சர், திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்து வதாகத் தெரிவித்தார். வெளி நாடு வாழ் தமிழர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என் றால், ஓடோடி வந்து உதவு வதாகவும், அரசின் அயல கத் தமிழர் நலன் துறை அவர்களுக்காக உழைப்ப தாகவும்” அவர் கூறினார். “வாழ்வதும் வளர்வதும் தமிழும் தமிழ் இனமுமாய் இருக்க வேண்டும். சாதி, மதம், ஏழை பணக்காரன் போன்ற வேறுபாடுகள் நம்மை பிரிப்பதோடு வளர வும் விடாது. தமிழ் என்ற வேரில் வளர்ந்திருக்கும் நாம், நம்முடைய அடை யாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” என்று அவர் வலியுறுத்தினார். “தமிழ் நாட்டுக்கு வாருங்கள். உங் கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். சிறந்த உட்கட்டமைப்பு, அமைதியான சூழல் காரண மாக தமிழ்நாட்டில் முதலீடு கள் குவிகின்றன” என்றும் தெரிவித்தார்.