tamilnadu

ஆதியன் பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தல் சிபிஎம் மாநில செயலாளரிடம் மனு

ஆதியன் பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தல்  சிபிஎம் மாநில செயலாளரிடம் மனு

திருவாரூர், செப். 7 -  கடந்த 45 ஆண்டு காலமாக சாதி சான்றிதழ் கிடைக்காமல் போராடி வரும் ஆதியன் பழங்குடி மக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகத்திடம் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு ஆதியன் பழங்குடி மக்களின் மாநில செயலாளர் கே.ராஜீ, மாவட்டத்தலை வர் என்.அன்புமணி, செயலாளர் என்.ஆறுமுகம் ஆகியோர் பெ.சண்முகத்தை நேரில் சந்தித்து மனு வழங்கினர். 450 குடும்பங்கள் பாதிப்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, முத்துபேட்டை, மன்னார்குடி வருவாய் கோட்டம் மற்றும் ஆப்பரகுடி, விளத்துர், குடவாசல் வட்டாரத்தில் உள்ள ஸ்ரீ வாஞ்சி யம் போன்ற 6 கிராமங்களில் 450-க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் இந்தப் பிரச்ச னையால் பாதிக்கப்பட்டுள்ளன. “சாதி சான்று இல்லாத காரணத்தால் கடந்த 45 ஆண்டு காலமாக பல்வேறு போராட் டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் இதுவரை சான்று கிடைக்கப் பெற முடி யாமல் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மேற்படிப்பு படிக்க மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்” என்று மனுதாரர்கள் தெரிவித்தனர். எம்பிசி பிரிவில்  வகைப்படுத்தல் பிரச்சினை ஒவ்வொரு போராட்டத்தின் மேலும் மானு டவியல் ஆய்வாளர்கள் வந்து, பின்னர் ஒவ்வொரு விதமான சாதி சான்றுகளை எம்பிசி பிரிவின் கீழ் கொடுக்கப்படுவதா கவும், இதனால் குழப்பம் ஏற்படுவதாகவும் மனுதாரர்கள் தெரிவித்தனர். “ஆகவே உரிய வகையில் ஆதியன் பழங்குடி மக்களுக்கு தடையின்றி சாதி சான்றிதழ் வழங்கிட தமிழ்நாடு அரசிடம் வலி யுறுத்த வேண்டும். ஆதியன் பழங்குடி மக்க ளுக்கு சாதி சான்றிதழ் கிடைத்திட உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஆதியன் பழங்குடி மக்களுக்கு சாதி வழங் கப்பட்டு வந்தாலும், இன்னும் பல்வேறு மாவட்டங்களில் சாதி சான்றிதழை அரசு வழங்காமல் காலதாமதம் செய்து நிலுவை யில் வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.