பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது
17ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (செப்.9) ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி வரும் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று நடைபெறும் தொடக்கப்போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.
இந்த முறை T20 வடிவில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), ஓமான், ஹாங்காங் ஆகிய 8 நாடுகள் பங்கேற்கின்றன.
மொத்தம் 19 ஆட்டங்கள் நடைபெறும் இந்த தொடரில், குழு சுற்றுக்கு பின் சூப்பர் ஃபோர் (Super Four) சுற்று நடைபெறும். அதிலிருந்து முன்னிலைப் பெற்ற இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
இந்த தொடர், அடுத்த ஆண்டுக்கான உலகக்கோப்பைக்கு முன் ஆசிய அணிகள் தங்கள் சக்தியை சோதிக்கும் முக்கிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.