தமிழ்நாட்டில் இன்று டி-20 உலகக்கோப்பை ஆட்டம் இந்திய அணி விளையாடுகிறது
10ஆவது சீசன் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா - இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடரில் சூப்பர் 8 சுற்று நடைபெற்று வரும் நிலையில், வியாழனன்று இரவு நடைபெறும் 8ஆவது “சூப்பர் 8” ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. தமிழ்நாடு தலைநகர் சென்னையில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. குரூப் 1-இல் (சூப்பர் 8 சுற்று) இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், 4 அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ளன. இதில் மேற்கு இந்தியத் தீவுகள் - தென் ஆப்பிரிக்கா அணிகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், நடப்பு சாம்பியனான இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தோல்வியடைந்துள்ளன. இதனால் இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கும் சென்னையில் நடை பெறும் ஆட்டம் மிக முக்கியமானது ஆகும். தோல்வி அடையும் அணி வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும். குறிப்பாக, இந்தியா கூடுதல் அல்லது நல்ல நிலையிலான ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அரை யிறுதி பற்றி சிந்திக்க முடியும் என்ற சூழல் உள்ளது. அதே போல சூப்பர் 8 சுற்றுக்கு முதன்முறையாக வந்துள் ளோம்; ஒரு ஆட்டத்தில் தானே தோல்வி; அதனால் இந்தியாவிற்கு அதிர்ச்சி அளித்து, அரையிறுதிக்குச் செல்ல ஜிம்பாப்வே அணியும் தீவிர பயிற்சியுடன் களமிறங்குகிறது. இதனால் இந்த ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா - மே.இ. தீவுகள் இந்தியா - ஜிம்பாப்வே ஆட்டத்திற்கு முன்னதாக, 7ஆவது “சூப்பர் 8” ஆட்டத்தில் தென் ஆப்பி ரிக்கா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் பலப்பரீட்சை நடத்து கின்றன. இந்த ஆட்டம் இந்திய அணிக்கும் மிக முக்கியமானது ஆகும். காரணம் இந்த ஆட்டத்தின் வெற்றி, தோல்வி இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு மிக முக்கியமானது என்பதால், இந்த ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா - மே.இ. தீவுகள்
நேரம் : மதியம் 3 மணி / இடம் :அகமதாபாத், குஜராத்
இந்தியா - ஜிம்பாப்வே
நேரம் : இரவு 7 மணி / இடம் : சேப்பாக்கம் மைதானம், சென்னை, தமிழ்நாடு
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)
தடைசெய்யப்பட்ட பயிற்சியாளருடன் உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக்குச் சென்ற பாகிஸ்தான் ஹாக்கி அணி
ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை ஆகஸ்ட் 14ஆம் தேதி நெதர்லாந்து, பெல்ஜியம் நாடுகளில் கூட்டாக தொடங்குகிறது. இந்த தொடருக்காக எகிப்தில் நடை பெறவுள்ள உலகக்கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் தடைசெய்யப்பட்ட பயிற்சியாளருடன் பாகிஸ்தான் ஹாக்கி அணி புறப்பட்டுச் சென்றுள் ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. 2022 ஆசியக் கோப்பையின் போது, ஜப்பானுக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் களத்தில் ஒரு கூடுதல் வீரர் இருந்ததால் பாகிஸ்தானின் கோல் ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்த அணி தோல்வியடைந்து உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இந்தத் தவறுக் காகவே பாகிஸ்தான் பயிற்சியாளர் கவாஜா ஜுனைத்திற்கு ஆயுள் காலத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கவாஜா ஜுனைத் என்பவரை இடைக்காலப் பயிற்சியாளராக பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு நியமித்துள்ளது. இதற்கு வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேப்டன் அமாத் பட் தலைமையிலான வீரர்கள், டச்சு பயிற்சியாளர் ரோலண்ட் ஓல்ட்மன்ஸ் என்பவரை நியமிக்கக் கோரினர். ஆனால், கால அவகாசம் இல்லாத தால் ஜுனைத்தை ஏற்குமாறு பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பின் இடைக்காலத் தலைவர் மொஹியுதீன் வானி உத்தரவிட்டுள்ளார். இந்த நியமனத்தில் அரசியல் பின்னணி இருப்பதாகக் கூறப்படுகிறது. வீரர்கள் இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும், உள் துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடம் உதவி கோரியும் பலன் கிடைக்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.
