மெக்சிகோவில் வன்முறை உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு பாதிப்பா?
23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து தொடரை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின் றன. இந்த தொடர் 2026ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், உலகக்கோப்பை தொடரை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் வன்முறை வெடித்துள்ளதால், அங்கு கால்பந்து போட்டிகள் நடைபெறுமா என்ற அச்சம் நிலவி வருகிறது. மெக்சிகோவின் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஜாலிஸ்கவில் ஏற்பட்ட வன்முறையில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர்ச்சியாக அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. மெக்சிகோ வில் 13 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் 4 போட்டி கள் மேற்கு நகரமான குவாடலஜாரா வில் நடைபெறுகின்றன. இது ஜாலிஸ் கோ கார்டெல் குழுவின் முக்கிய மையமான ஜாலிஸ்கோ மாநிலத்தில் அமைந்துள்ளதால், உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வரு கிறது. இத்தகைய சூழலில், உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் நாடாக மெக்சிகோ மீது தமக்கு “முழு நம்பிக்கை” உள்ளது. அதனால் கண்டிப் பாக போட்டி பிரச்சனையின்றி நடை பெறும் என சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) தலைவர் கியானி இன்பான்டினோ வியாழனன்று தெரி வித்தார். இதுகுறித்து மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமிடம் தான் பேசியதாகவும் அவர் குறிப் பிட்டார்.
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் :
இன்றைய ஆட்டம்
பாகிஸ்தான் - இலங்கை நேரம்:இரவு 7:00மணி/இடம்: கொழும்பு, இலங்கை சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)
இனவெறி சர்ச்சை வினிசியஸுக்கு ஆதரவாக நெய்மர்
ஐரோப்பாவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் கட்ட பிளே-ஆப் சுற்றில் பென்பிகா (போர்ச்சுக்கல் கிளப்) அணியினர், ரியல் மாட்ரிட்டின் (ஸ்பெயின் கிளப்) நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர் (பிரேசில்) மீது ‘குரங்கு’ என்று கூறி, இனவெறி ரீதி யாக கிண்டலடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் காரணத்தினால், இரண்டாம் கட்ட பிளே-ஆப் போட்டி யில் குற்றம்சாட்டப்பட்ட பென்பிகா அணி வீரர் பிரெஸ்டியானி (அர்ஜெண்டினா) பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இனவெறி ரீதி யாக பாதிக்கப்பட்ட வினிசியஸுக்கு நெய்மர் ஆதரவு அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “கடந்த வாரம் என்னை மிகவும் மோச மான வீரர்கள் என்று பேசினார்கள். இன்று 2 கோல்கள் அடித்ததும் என்னை மிகச்சிறந்த வீரர்கள் என்கிறார்கள். அதுதான் கால்பந்து. சில நாள்களில் நாம் நன்றாக விளையாடமாட்டோம். ஓய்வு பெற தோன்றும். சில நாள்களில் உலகக் கோப்பைக்கு தேர்வாக வேண்டுமென பலர் சொல்லுமளவுக்கு நன்றாக விளையாடுவோம். என்னால் முடிந்த அளவுக்கு சிறப் பான அளவில் விளையாட முயற்சிக் கிறேன். மூன்றில் இரண்டு முறை 90 நிமிஷங்களும் விளையாடி இருக் கிறேன். கடைசியில் சற்று தசைப் பிடிப்பு ஏற்பட்டது. வினிசியஸ் சமீபத்தில் இனவெறிக்கு ஆளானார். இது மோசமானது. அதனால், ஆதர வாக அவரைப் போல கொண்டாட்டத் தில் ஈடுபட்டேன்” என்றார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த நெய்மர் (32) சான்டோஸ் கிளப்பில் விளை யாடி வருகிறார். முழங்காலில் அறு வைச் சிகிச்சை செய்யப்பட்ட பிறகு, மீண்டும் புத்துணர்ச்சியுடன் விளை யாடி வருகிறார். ஒருபோட்டியின் வெற்றிக்குப் பிறகு வினிசியஸ் போலவே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு தனது ஆதரவை நெய்மர் வழங்கி, பேட்டியும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
