ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ராஜினாமா
டோக்கியோ, செப்.7- ஜப்பான் நாட்டின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவரான (கட்சியின் தலைவரே பிரதமர்) ஷிகெரு இஷிபா பிரதமராக உள்ளார். கடந்த ஜூலை மாதம் நடந்த நாடாளு மன்ற மேலவை தேர்தலில் ஆளுங் கட்சி படுதோல்வி அடைந்தது. இத னால் லிபரல் டெமாக்ரடிக் கட்சி பெரும்பான்மையை இழந்து விட்டது. இதற்கு பொறுப்பேற்று பிரதமர் ஷிகெரு இஷிபா ராஜி னாமா செய்ய வேண்டும் என்று கட்சியின் மூத்த தலை வர்கள், நிர்வாகிகள் கடந்த ஒரு மாதமாக குரல் எழுப்பி வருகின்றனர். தன் மீதான கருத்துக்களை பிரதமர் ஷிகெரு இஷிபா புறக்கணித்து வந்தார். இந்நிலையில், கட்சி தலைமைப்பதவிக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்தலாமா என்பது பற்றி திங்கட் கிழமை அன்று லிபரல் டெமாக்ரடிக் கட்சி முடிவு செய்ய உள்ளது. அதை கட்சியின் நிர்வாகிகள் அங்கீகரிக்கும் பட்சத்தில், ஷிகெரு இஷிபா பதவி விலக வேண்டி யிருக்கும். அதை தவிர்க்கும் நோக்கத்தில், அவர் தானா கவே ஞாயிறன்று தனது தலைவர் மற்றும் பிரதமர் பதவி யை ராஜினாமா செய்ய முன் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷிகெரு இஷிபா ராஜினாமா செய்துள்ள நிலையில், ஜப்பான் நாடாளுமன்ற கீழவையில் பலம் வாய்ந்த கட்சி யாக திகழும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியில் இருந்து அடுத்த பிரதமர் தேர்வாவதும் உறுதியாகியுள்ளது. அடுத்த பிரதமருக்கான போட்டியில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களான டகாய்ச்சி, ஷிஞ்ஜிரோ கோய்ஸுமி, யோஷிமாசா ஹயாஷி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.