tamilnadu

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் இன்று மாதிரி வாக்குப் பதிவு

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் இன்று மாதிரி வாக்குப் பதிவு

புதுதில்லி, செப்.7- குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை (செப். 9ஆம் தேதி)  நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி சார்பில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். இந்நிலையில், முன்னிட்டு திங்கள்கிழமை மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். மாதிரி  வாக்குப்பதிவின் போது, எதிர்க்கட்சி எம்.பி.க்க ளுக்கு குடியரசுத் துணை தலைவர் தேர்தலில்  எவ்வாறு வாக்களிப்பது உள்ளிட்ட நடைமுறை கள் பற்றி விளக்கப்படவுள்ளது. வீடியோ வெளியிட்ட சுதர்சன் ரெட்டி இத்தகைய சூழலில் “இந்தியா” கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஞாயிறன்று ஒரு  வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வில், “ஒரு உரையாக இல்லாவிட்டாலும், சில  கருத்துக்களை உங்கள் முன் வைக்க விரும்பு கிறேன். குடியரசுத் துணை தலைவர் தேர்தலுக்கு சில நாட்களே உள்ளன. உங்கள் கட்சியின் நல னுக்காக அல்ல, நாட்டின் நலனுக்காக வாக்களிக்கு மாறு நான் உங்களை மனதார கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் எந்த முடிவை எடுத்தா லும், அது எனக்கு சாதகமாகவோ அல்லது உங்க ளுக்கு சாதகமாகவோ இருக்காது. மாறாக நாட்டின் நலனுக்காகவே இருக்கும் என்று நான்  முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்” எனத் தெரி வித்துள்ளார்.