புத்தகம் பேசுது சிறப்பிதழ் வெளியீடு...
மதுரை புத்தக திருவிழா பெரும் உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. இதில் அரங்கு எண் 141, 142 இல் பாரதி புத்தகாலயம் செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் ஏராளமான வாசகர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை பார்வையிட்டு வாங்கிச் செல்கின்றனர். பாரதி புத்தகாலயத்தின் ‘புத்தகம் பேசுது’ இதழ், மதுரை புத்தக திருவிழாவையொட்டி, மூத்த எழுத்தாளரும், 60 ஆண்டுகளுக்கும் மேலாக செம்மலர் இதழின் ஆசிரியர்களில் ஒருவராக இடைவிடாமல் செயல்பட்டு வரும் தமிழகத்தின் மூத்த இலக்கியவாதியுமான தி.வரதராசன் அவர்களது நேர்காணலுடன் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இந்த இதழை ஞாயிறன்று பாரதி புத்தகாலய அரங்கில் செம்மலர் ஆசிரியர் ச.தமிழ்ச்செல்வன் வெளியிட, தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். என்.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரதி பத்தகாலய மேலாளர் க.நாகராஜன், தமுஎகச மாவட்டச் செயலாளர் ஸ்ரீரசா, செ.தங்கவேல், ஆர்.கோபிநாத் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.