அச்சுறுத்தும் பிளாஸ்டிக் கழிவு அகற்ற முடியாமல் திணறும் உள்ளாட்சிகள்
விருதுநகர், செப்.7- தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் கேரிபேக் கழிவுகளை அகற்ற முடியா மல் உள்ளாட்சி அமைப்புகள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், குப்பைக் கிடங்குகளில் எந்த நேரமும் புகை மூட்டமாய் காட்சியளிக்கின்றன. 40 மைக்ரான் அளவுக்கு குறை வான பிளாஸ்டிக் பைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். லேசான பிளாஸ்டிக் பைகளை விற்பது குற்றம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் பிளாஸ்டிக் பைகள் விற்கப்படும் கடைகளில் கண் துடைப்பாகவே சோதனை செய்யப் பட்டு, கேரி பைகள் பெயரளவுக்கு மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டு வரு கின்றன. ஆனால், அந்த சோதனையும் தொடர்ந்து நடைபெறவில்லை. இத னால், மேலும், மேலும் இலகுவான கேரி பைகள் வியாபாரம் அதிகரித்துக் கொண்டே போகிறது. மேலும், வெள்ள ரிக்காய், பூ, தேநீர், உணவுப் பொருட்கள், பல சரக்கு சாமான்கள் அனைத்தும் லேசான கேரி பைகளில் தரப்படுகிறது. இதனால், பிளாஸ்டிக் கழிவுகள், கழிவுநீர் வாறுகால், நீர் வரத்து ஓடைகள், ஆறுகள் என அனைத்து நீர்நிலைகளிலும் மலை போல் குவிந்து கிடக்கிறது. அண்டை மாநிலமான கேரளாவில் உறுதியான நடவடிக்கை எடுக்கப் பட்டு, இலகுவான கேரிபைகள் முற்றி லும் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், தமிழக அரசோ, 40 மைக்ரா னுக்கு குறைவான கேரி பைகள் தயார் செய்யும் இடத்திலேயே அதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுப்ப தில்லை. இதனால், ஒவ்வொரு மாநக ராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி களில் குப்பைகள் தேங்கி விடுகின்றன. அதை உள்ளாட்சி நிர்வாகங்களால் அகற்ற முடிவதில்லை. மேலும், பலர், கேரி பைகளில் உணவு பொருட்களை போட்டு, கட்டி, குப்பையில் வீசி விடுகின்றனர். இத னால், உணவின்றி குப்பை மேடு களுக்கு வரும், ஆடுகள், மாடுகள் பிளாஸ்டிக் பைகளையும் சேர்த்து விழுங்கி விடுகின்றன. இதனால், நாள டைவில் அந்த உயிரினம் உயிரிழந்து விடுகிறது. மேலும் பலர், கேரி பை களை சிறிய கழிவு நீர் வாறுகாலில் போட்டு விடுகின்றனர். இதனால், வாறு காலில் கழிவு நீர் செல்ல வழியின்றி அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், துப்புரவு தொழிலா ளர்கள் மூலம் கொண்டு வரப்படும் குப்பைகள், உள்ளாட்சி அமைப்பு களுக்கு சொந்தமான குப்பை கிடங்கு களில் அப்படியே கொட்டப்படு கின்றன. அங்கு அவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித் தனியே பிரித்து எடுக்க முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இத னால், குப்பைக் கிடங்குகளில் பிளாஸ் டிக் கழிவுகள் மலை போல் தேங்கி கிடக்கின்றன. அதில் சிலர் தீ வைத்து விடுவதால், எப்போதும், குப்பைக் கிடங்குகள் எரிந்து கொண்டு இருக் கின்றன. மேலும் அப்பகுதி முழு வதும் பெரும் நச்சுப் புகை மூட்டங்கள் ஏற்பட்டு, பல கிலோ மீட்டர் தூரத் திற்கு அந்தப் புகை பரவுகிறது. இத னால், சுத்தமான காற்று மாசுபடு கிறது. அந்த நச்சுப் புகையை சுவா சிப்பவர்களுக்கு புற்றுநோய், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பலவிதமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உள்ளாட்சி நிர்வாகங்களில் பல இடங்களில் குப்பை தொட்டிகள் இல்லாத இடங்களில் வீசப்படும் கேரி பைகள், லேசான காற்று வீசினால் கூட, சாலை முழுவதும் பறக்கின்றன. விளை நிலங்களில் ஏராளமான பிளாஸ்டிக் பைகள் விழுவதால், மழை நீர் நிலத்திற்குள் செல்ல முடிவ தில்லை. இதனால், நாளடைவில் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போகும் அபாய நிலை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ஏற்கனவே, உள்ளாட்சி அமைப்புகளில் நிரந்தர சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக் குறை உள்ளது. பிளஸ்டிக் கேரி பைகள் தயார் செய்யும் நிறுவ னங்களை தடை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், பாதி குப்பைகள் கட்டுப்படுத்தப்படும். மேலும், சோப்பு கள், ஷாம்புகள், சீயக்காய், சாக் லேட்டுகள், எண்ணெய், தண்ணீர் பாக்கெட்டுகள் ஆகியவற்றை பிளாஸ்டிக் பைகளில் அடைப்பதை யும் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் தமி ழக மக்கள் நோயின்றி வாழ்வார்கள். மேலும் நிலத்தடி நீரும் பாதுகாக் கப்படும் என்றார். க.ஜெயக்குமார்