world

img

கூகுளுக்கு அபராதம் விதித்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு டிரம்ப் மிரட்டல்!

கூகுளுக்கு விதித்த அபராதத்தை ரத்து செய்யாவிட்டால், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், டிஜிட்டல் போட்டி விதிகளை மீறியதற்காகவும், பயனர்களின் தரவுகளை தவறாக பயன்படுத்திய புகாரில் கூகுள் நிறுவனத்திற்கு 3.5 பில்லியன் டாலர் அபராதம் விதித்தது. இந்த நிலையில், இந்த அபராதம் விதிப்பு நியாயமற்றது. அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக விதிக்கப்படும் நியாயமற்ற அபராதங்களை ரத்து செய்யாவிட்டால், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை உள்ளடக்கிய பிரிவு 301 விசாரணை தொடங்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.