சீனா எங்களுக்கு முக்கிய சந்தை அமெ. நிவிடியா நிறுவன சிஇஓ கருத்து
சீனாவின் சந்தை எங்கள் நிறுவனத்திற்கு மிக முக்கியமானது என நிவிடியா (Nvidia) நிறுவனத் தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சென் ஹுவாங் தெரிவித்துள்ளார். டிரம்ப் நிர்வாகம் துவங்கியுள்ள வர்த்தக போரின் ஒரு பகுதியாக அந்நாட்டில் உள்ள மிக பிரபலமான செயற்கை நுண்ணறிவு சிப் தயா ரிக்கும் நிறுவனமான நிவிடியாவின் எச்-20 செயற்கை நுண்ணறிவு சிப்களை சீனாவுக்கு விற்ப தற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நிவிடியா நிறுவனத் தின் வருவாயை பாதித்துள்ளது. இந்த பாதிப்பு பங்குச் சந்தை சரிவில் வெளிப்படையாகத் தெரிந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஜென்சென் சீனா விற்கு சென்றுள்ளார். சீனாவில் நடைபெற்ற உள்நாட்டு வர்த்தக கண்காட்சிக்கு அழைக்கப்பட் டதன் பேரில் அவர் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் தொடர்ந்து சீனாவுடன் ஒத்துழைக்க தங்கள் நிறுவனம் விரும்புவதாக வும், சீனா ஒரு முக்கியமான சந்தையாக இருப்ப தால், அமெரிக்க கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தொ டர்ந்து வணிகம் செய்யும் வழிகளை அந்நிறு வனம் தேடி வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் வரிவிதிப்பால் உலகளாவிய வர்த்த கம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் எவ்வாறு சிக்கல்களை சந்திக்கின்றன என இந்த சந்திப்பு வெளிக்காட்டுவதாக உள்ளது. அத்துடன் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவின் சந்தையை பெரிதும் நம்பியுள்ள நிலையில் இந்த வர்த்தக போர் அமெரிக்க நிறுவனங்களுக்கும் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளதை காட்டுகிறது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பயணத்தின் போது ஜென்சென் சீனா வில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனமான டீப்சீக் நிறு வனத்தின் நிறுவனர் லியாங் வென்ஃபெங் மற்றும் சீன வணிக செயலாளர் ஹே லிஃபெங் ஆகி யோரை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு சில நாட்களுக்கு முன்பாக ஜென்சென் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து சிப் ஏற்றுமதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சிப் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் இந்நிறு வனத்திற்கு நூற்றுக்கணக்கான டாலர்கள் இழப்பை ஏற்படுத்தும் என்பதால் அந்நிறு வனத்தின் முக்கியமான சந்தையாக உள்ள சீனா வுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவதற் கான வழிகளைக் கண்டறியும் முயற்சியாக இந்த சந்திப்பு இருக்கும் என கூறப்படுகின்றது