world

img

தீக்கதிர் உலக செய்திகள்


பன்முக வர்த்தகத்தை  பாதுகாக்க சீனா அழைப்பு

பன்முக வர்த்தகத்தை பாதுகாக்க தெற்கு லக நாடுகளுக்கு சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரிவினைகளை உருவாக்கும் அதிகார அரசியல், அச்சுறுத்தல்களால் வர்த்தக அமைப்பின் பன்மு கத்தன்மை பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும் உலகம் மீண்டும் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும் என உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.

ஹவுதி அமைப்பின் துறைமுகத்தில்  குண்டுவீசிய அமெரிக்கா 

ஏமனில் அமெரிக்க போர்விமானங்கள் குண்டு வீசி நடத்திய தாக்குதலில் படுகொ லையானவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150 பேர் படுகாயமடைந் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹவுதிஅமைப் பிற்கு தேவையான இறக்குமதி ஏற்றுமதிகளை செய்யும் மிக முக்கியமான ராஸ் இசா என்ற துறை முகத்தில் எரிபொருள் சேமிப்பு தொட்டிகளில் அமெரிக்கா குண்டு வீசியுள்ளது. இந்த தாக்குதலில் துறைமுக தொழிலாளர்கள், ஐந்து மருத்துவ உதவியாளர்கள் படுகொலையாகியுள்ளனர். 

படகில் தீ விபத்து 48 பேர் பலி

காங்கோவில் ஆற்றில் சென்ற மரப்படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 148 பேர் பரி தாபமாக பலியாகியுள்ளனர். மேலும் மத்திய ஆப்பி ரிக்க நாடான காங்கோவில் ஆற்றில் எரிபொருள் ஏற்றிச் சென்ற மரப்படகில் 500 பயணிகளும் பய ணித்துள்ளனர். அப்படகில் ஏற்பட்ட தீயில் சிக்கியும் பயத்தில் தண்ணீரில் குதித்ததில் மூழ்கியும் 148 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 100 பேர் காணாமல் போயுள்ளனர். எனவே பலியானவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

இந்திய மாணவி  கனடாவில் படுகொலை 

கனடாவில் இரு குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 21 வயதுடைய இந்திய மாணவி ஒருவர் படுகொலை செய்யப் பட்டுள்ளார். பேருந்து நிறுத்தத்தில் அம்மாணவி காத்திருந்தபோது இரண்டு கும்பல்கள் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டிருந்தன. அப்போது  இரண்டு வாகனங்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட் டுள்ளது. அப்போது அப்பெண்ணின் மீதும் குண்டு பாய்ந்துள்ளது என தெரிய வந்துள்ளது. இவர் கடந்த நான்கு மாதங்களில் கனடாவில் கொல்லப் பட்ட நான்காவது இந்தியர் ஆவார்.

இந்தியா வருவதாக  எலான் மஸ்க் அறிவிப்பு

இந்த ஆண்டின் இறுதியில் இந்தியா வருவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். பிரதமர் மோடி எலான் மஸ்க் உடன் தொலைப்பேசி உரையாடல் நடத்திய பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. தொழில் நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி, செயற்கை நுண்ண றிவு உள்ளிட்ட துறைகள் சார்ந்து மோடி எலான் மஸ்க் உடன் இரண்டு நாட்களுக்கு முன் பேசியுள்ளார். அவர் இந்தியா வருகை தரும் போது இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு துறைகளுடன் தனது ஸ்டார் லிங்க் சேவையை இணைக்கும் பேச்சுவார்த்தை யையும் நடத்தலாம் என கூறப்படுகின்றது. 

அதிக வேலை நேரம்: நெருக்கடியை சந்திக்கும் ஐரோப்பிய சுகாதார அமைப்புகள்

பிரஸ்ஸல்ஸ் ஐரோப்பா முழுவதிலும் உள்ள சுகாதார நிலையங்கள் அதிக நேரம் இயங்குவ தாக தொழிற்சங்கங்கள் சேகரித்த தரவுகளின்படி தெரிய வந்துள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சுகாதார அமைப்பு களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பாமல் தொ டர்ந்து காலம் தாழ்த்தி வருவது, பட்ஜெட்களில் பணத்தை வெட்டுவது, மோசமான அரசியல் சூழல் காரணமாக இந்த பிரச்சனை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மோச மான நிலையின் காரணமாக கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு சுகாதாரப் பணியாளர்கள் தங்கள்  வேலை நேரத்தை விட அதிக நேரம் வேலை செய்யும் சூழல் உருவாகியுள்ளது. கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு இந்த நிலை மேலும் மோசமாகி உள்ளது.   நீண்ட காலமாக உள்ள சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறை, குறைந்த ஊதியம் மற்றும் மோச மான வேலை திட்டமிடல் ஆகியவை சுகாதார மற்றும் பராமரிப்புப் பணியாளர்களை  குறிப்பாக செவிலியர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டிய சூழலுக்கு தள்ளியுள்ளது. வேலைப்பளுவால் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள அவர்கள்  ஓய்வு நேரத்தைக் கூட ரத்துசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இத்தகைய நிலைமைகள் தற்செயலானது அல்ல சிக்கனம் என்ற பெயரில் அரசாங்கங்கள் சுகாதார அமைப்பு களில் எடுக்கும் முடிவுகளே காரணம் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.  இந்த அதிக நேரப் பணி என்பது பெரும் பான்மையான ஐரோப்பிய நாடுகளிலும் நிலவு கின்றது. உஸ்பெகிஸ்தான், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கைகள் நோயாளிகளுக்கு சுகாதார சேவை மற்றும் கவனிப்பு வழங்கப்படுவதை உறுதிசெய்வ தற்காக சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் சொந்த நலனை எவ்வாறு தியாகம் செய்கிறார்கள் என்பதை விளக்குகின்றது. இதன் விளைவாக ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு அளவிற்கான சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றவு டன் அன்றாட வாழ்க்கையை கவனிக்கவும் குடும்பத்துடன் நேரம் செலவிடவும் முடியாமல்  சிரமப்படுவதாக கவலையை வெளிப்படுத்தியுள்ள னர்.  பலருக்கு தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடியவில்லை. நீண்ட நேரம் வேலை செய்து விட்டு வீட்டுக்குச் செல்லும் போது அவர்க ளுடன் கொஞ்சி விளையாட முடியாத அளவிற்கு ஆற்றல் இன்றி இருப்போம் என தெரி விக்கின்றனர்.  சில சுகாதாரப் பணியாளர்கள் காலை 6 மணிக்கே வீட்டை விட்டு வெளியேறி மூன்று வெவ்வேறு வாகனங்கள்  மாறி பணிக்குச் செல்வதாகவும் அவர்களது வேலை முடிய இரவு கூட ஆகும் எனவும் தெரிவித்துள்ளனர். சில பணி யாளர்கள் கணவன் மனைவி என இருவரும் ஒரே துறையில் வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் நிலையில் குழந்தைகளை நேரடியாக பராம ரிக்க முடியாமல் தமது பெற்றோர்களிடம் விட்டு விடுவதாகவும் தெரிவித்துள்ளனர். ஊதியமும் குறைவாக உள்ளதால் இருவரில் ஒருவரது பணம்  முழுமையாக வாடகைக்குச் சென்று விடுகின்றது. ஒருவரின் ஊதியத்தை மட்டும் வைத்து குழந்தை கள், குடும்பத்தினரின் செலவுகளை முழுமை யாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை என தெரி விக்கின்றனர். கிரீஸ் நாட்டில் சுகாதாரத் துறையில் உள்ள பணியாளர்கள் பற்றாக்குறையால் மூன்று ஆண்டுகளில் வெறும் 15 நாட்கள் மட்டுமே விடு முறை எடுக்க முடிந்தது என்று சில மருத்துவ மனை ஊழியர்கள் அதிர்ச்சியான விசயங்களை யும் பகிர்ந்துள்ளனர்.  இத்தகைய சூழலில் தங்கள் நாட்டு அரசுகள் சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் நிதிகளை வெட்டக்கூடாது. சுகாதாரத் துறையில் உள்ள  காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சுகாதாரப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.