world

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

புதிய செயற்கை நுண்ணறிவு  மாதிரிகள் வெளியீடு

ஓபன் ஏஐ நிறுவனம் புதிதாக ஓபன் ஏஐ-o3  மற்றும் ஓபன் ஏஐ-omini என இரு  செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை வெளி யிட்டுள்ளது. இது  பயனர்கள் குறைந்த  அல்லது நல்ல தரம் கொண்ட புகைப்படங்கள்  வரைபடங்கள் ஆகியவற்றை கொடுத்தாலும் அதனை புரிந்துகொண்டு பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்டது என கூறப்படு கின்றது. இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு  மாதிரிகளை டீப் சீக், ஜெமினி உள்ளிட்ட நிறு வனங்களும் உருவாக்கி வருவது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்க துணை ஜனாதிபதி  ஏப்.21 இல் மோடியை சந்திக்கிறார்

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஏப்ரல் 21 அன்று பிரதமர்  நரேந்திர மோடியை சந்திப்பார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நான்கு  நாள் பயணமாக வான்ஸ், அவரது மனைவி உஷா ஆகியோர் இந்தியா வரவுள்ளார்கள். இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கும் இடையி லான வர்த்தகம், பரிவர்த்தனை, வரிகள் குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது.

ஜெலென்ஸ்கியின் குற்றச்சாட்டுக்கு  எந்த ஆதாரமும் இல்லை – சீனா

ரஷ்யாவிற்கு சீனா ஆயுதங்கள் கொடுக்கின் றது என உக்ரைன் ஜனாதிபதி குற்றம்சாட்டிய  நிலையில் அது ஆதாரமற்றது என சீன வெளி யுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது. ரஷ்யாவிற்கு சீனா ஆயுதங்கள் வழங்குகிறது என ஜெலென்ஸ்கி செய்தியாளர் சந்திப்பில்  கூறினார். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவுடன்  நெருக்கமான பொருளாதார உறவுகளைப் கடைப்பிடித்து வந்தாலும்சீனா நடுநிலைமைதான்  வகிக்கிறது. போருக்கு ஆதரவாக நாங்கள் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை என சீன வெளி யுறவுத் துறை தெரிவித்துள்ளது.

அமெ. வரிகளை எதிர்கொள்ள  அரசியல் தலைவர்கள் விவாதம்

அமெரிக்கா விதித்துள்ள வரிகளை எதிர் கொள்ள கனடா நாட்டின் நான்கு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் விவாதம்  நடத்தியுள்ளனர். இந்த விவாதத்தில் அமெரிக் காவின் வரிகள், கனடா மீதான அச்சுறுத்தல்கள்,  எரிசக்தி, வாழ்க்கைச் செலவு, காலநிலை மாற்றம், பொது பாதுகாப்பு உள்ளிட்ட ஐந்து முக்கிய கருப்பொருள்களில் விவாதம் நடத்தப் பட்டுள்ளது. மேலும் இந்த தலைவர்கள் வரி களுக்கு எதிராகவும், கனடாவை ஆக்கிர மிக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு எதிராகவும்  உள்ளனர்.

ஈரானுடன் தொடர்ந்து ஒத்துழைக்க  அணுசக்தி முகமைக்கு அழைப்பு

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப் பாஸ் அராச்சி சர்வதேச அணுசக்தி முகமை  (ஐஏஇஏ) தலைவர் ரஃபேல் குரோசியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் ஈரானின்  அணுசக்தித் திட்டத்தின் மீது உருவாக்கப்ப டும் அழுத்தத்தை  சரிசெய்ய தங்கள் நாட்டு டன் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என  வலியுறுத்தியுள்ளார். மேலும் சில நாடுகளின் அழுத்தத்தை அவ்வமைப்பு எதிர்க்க வேண் டும். அந்நாடுகளின் தேவையற்ற அழுத்தங் களுக்கு அடிபணியாமல் தனது கடமைகளை  நிறைவேற்ற வேண்டுமென அழைப்பு விடுத்தார்.