வங்கதேச வன்முறையில் இளைஞர்கள் கொல்லப்பட்ட வழக்கில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டத்தில் 1,500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கொல்லப்பட்டனர். 30,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் (ICT-BD) மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. விசாரணை பல மாதங்களாக நடைபெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனித குலத்திற்கு எதிராக குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனைக்கு தகுதியானவர். அவர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார் என்பதற்காக வழங்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் சமர்பிக்கப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமல் மற்றும் முன்னாள் காவல்துறைத் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் ஆகியோ குற்றவாளி என சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதை தொடர்ந்து ஷேக் ஹசீனா, அசாதுஸ்மான் கான் கமல் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தீர்ப்பாயத்தில் மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனது பதவிக் காலம் முடிவதற்கு முன்பு நாட்டை விட்டு தப்பித்து போனது தொடர்பான இரண்டு வழக்குகளையும், 2013-ஆம் ஆண்டு ஷாப்லா சத்தார் நடவடிக்கையின் போது ஹெஃபாசத்-இ-இஸ்லாம் ஆர்வலர்கள் கொல்லப்பட்டது மற்றும் சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பான மற்றொரு வழக்குகளையும் அவர் எதிர்கொள்ள இருக்கிறார்.
