தமிழகத்தில் இன்று முதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு! வருவாய், ஊரக வளர்ச்சி, சத்துணவு ஊழியர்கள் அறிவிப்பு
சென்னை, நவ. 17 - தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான பணி களை இன்று (நவ. 18) முதல் புறக் கணிக்க உள்ளதாக வருவாய்த் துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணைய மானது (‘ECI’), தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 8 மாநிலங்களிலும், அந்தமான் & நிகோபர் தீவுகள், கோவா, லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய 4 யூனியன் பிரதேசங்களிலும் வாக்கா ளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) தொடங்கி யுள்ளது. வீடு, வீடாக கணக்கீட்டு விண்ணப்பங்களை விநியோகித்து, அவற்றைப் பூா்த்தி செய்து திரும்பப் பெறும் பணியில் வாக்குச்சாவடி அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் மட்டும், இது வரை 6 கோடி வாக்காளர் களுக்கு படிவங்கள் வழங்கப் பட்டிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், உரிய திட்டமிடல், முறையான பயிற்சி, நிதி ஒதுக்கீடு செய்யாமலேயே எஸ்ஐஆர் பணிகளை மேற் கொள்ளுமாறு, ஊழியர்களை நிர்பந்திப்பதால் பணிச்சுமை ஏற்படுவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தெரி வித்துள்ளது. மேலும், கணக்கெடுப்புக்கு போதிய காலஅவகாசம் அளிக்க வேண்டும், கூடுதல் பணிகளை கருத்தில் கொண்டு ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாகவழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (நவ. 18) முதல் எஸ்ஐஆர் பணிகளை புறக்கணிக்கப் போவதாக வருவாய்த்துறை அலு வலர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்கம் மற்றும் அங்கன் வாடி ஊழியர் சங்கங்களும் எஸ்ஐஆர் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளன.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சீ. காந்தி மதிநாதன், பொதுச்செயலாளர் க. பிரபு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை யில், “பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மூலமாக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான நெருக்கடிகள் கொடுக்கப் படுகின்றன. தற்போதுள்ள பணிக்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். படிவங்களை இணைய தளத்தில் பதிவு செய்வதற்குப் போது மான எண்ணிக்கையில் தனியாக டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர்களை நிய மனம் செய்ய வேண்டும்.
வளர்ச்சித் துறையின் கணினி உதவியாளர்கள் போன்ற பணியாளர்களை எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்து, தனியாக ஊழியர்களை நியமனம் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும்” என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. செல்லத்துரை, பொதுச்செயலாளர் ஏ. ஜெசி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “சத்துணவு திட்டத்தில் 64 ஆயிரம் காலிப்பணி யிடங்கள் நிரப்பப்படாத நிலையில், ஏற்கெனவே கடுமையான பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, தற் போது தமிழகத்தில் வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (SIR) என்ற பெயரில் அதிகாரிகளிடமிருந்து நெருக்கடிகள் வருகின்றன. பல இடங்களில் சத்துணவு ஊழியர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளன.
இது தீவிரமான மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. எனவே, அதிகாரிகளிடமிருந்து வரும் அழுத்தம், நெருக்கடியை எதிர்த்தும், எஸ்ஐஆர் பணி நிறைவுசெய்ய போதிய கால அவகாசம் வழங்கக் கோரியும், நவம்பர் 18 அன்று எஸ்ஐஆர் தொடர் பான பணிகளை முற்றிலும் புறக் கணிப்பது என முடிவு செய்துள்ளோம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் வாக்குச்சாவடி அளவிலான அலுவலா் (BLO) ஒருவா் தற்கொலை செய்துகொண்டார். எஸ்ஐஆர் தொடா்பான பணி அழுத்தமே அவரது முடிவுக்கு காரணம் என்று குடும்பத்தினா் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
