அரசுப் பேருந்தில் தீண்டாமை விவகாரம் போக்குவரத்துத்துறை செயலர், ஆட்சியருக்கு நோட்டீஸ்
கோவை, நவ.17- கோவையில் இயங்கி வரும் 21 ஆம் எண் கொண்ட அரசு நகரப் பேருந்தில் சாதி தீண்டாமை நடை பெற்ற விவகாரம் தொடர்பாக, போக்குவரத்துத்துறை செயலர் மற் றும் கோவை மாவட்ட ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை யம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவையில் இயங்கி வரும் 21 ஆம் என்ற எண் கொண்ட அரசு நகரப் பேருந்து, சாதிய தீண்டாமை காரண மாக தொண்டாமுத்தூர், கெம்பனூ ரில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி யான அண்ணா நகருக்கு இயக்கப்ப டுவதில்லை. இதனால் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கும் பேருந் தை இயக்க வேண்டும் என வலியு றுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மாணவர், வாலி பர், மாதர் உள்ளிட்ட சங்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், பட்டியலின மக்கள் பகுதிக்கு பேருந்தை இயக்கினால், பேருந்து அங்கிருந்து வரும் போது அவர்களுடன் சரி சமமாக அமர்ந்தும், அவர்கள் முன்பு நின்று கொண்டு வர வேண்டுமா? என்ற சாதிய நோக்கத்துடன் பேருந்து இயக்க மறுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஏற்கனவே, அண்ணாநகருக்கு செப்.24 ஆம் தேதிக்குள் 21 ஆம் எண் பேருந்தை இயக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு எஸ்.சி/எஸ்.டி ஆணையம் உத்தரவிட்ட நிலையில், அதனை பின்பற்ற வில்லை எனக் குற்றச்சாட்டு எழுந் தது. மாறாக, போளுவாம்பட்டி செல் லும் 64 சி என்ற பேருந்து அண்ணா நகருக்கு இயக்கியும், சாதிய பிரச் சனை இல்லை எனவும், அறிக்கை சமர்பித்து இந்த விவகாரத்தை மூடி மறைத்துள்ளனர். ஆனால், 21 ஆம் எண் பேருந்தை மட்டும், அண்ணா நக ருக்கு இயக்கவில்லை. பின்புலத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சியினர் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக இருந்து கொண்டு, முட்டுக்கட்டை போடுவதாக அப்பகுதி பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து 21 ஆம் எண் பேருந்து இயக்கக்கோரி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு கடந்த மாதம் புகார் அனுப்பப்பட்டது. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்துத் துறை செயலருக்கு தேசிய தாழ்தப் பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது. மேலும், அப்பகுதி மக்களுக்கு பேருந்தை இயக்கி நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.