திருப்பூர் மாவட்டம், அவிநாசி நகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள், தெருநாய்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தெரிவித்த னர். இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில், சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்களில் 35 தெருநாய்கள் பிடிக்கப்பட்டன. இவைகளை திருப்பூர் கொண்டு சென்று தடுப்பூசி போடப்பட்டு, கருத்தடை செய்யப்பட்டன. தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் பிறகு தெரு நாய்களை விடுவித்தனர்.
