tamilnadu

img

வாலிபர் சங்கம் சார்பில் கபடிப் போட்டி

வாலிபர் சங்கம் சார்பில் கபடிப் போட்டி

நாமக்கல், நவ.17- திருச்செங்கோடு அருகே உள்ள கொல்லப்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடை பெற்ற கபடிப் போட்டியில், வெற்றி பெற்ற அணிகளுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, 30  ஆவது வார்டுக்குட்பட்ட கொல்லப்பட்டி அரசுப்பள்ளி மைதானம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாவட்ட சீனியர் சாம்பியன் ஷிப் ஆண்கள் கபடிப் போட்டி ஞாயிறன்று நடைபெற் றது. இப்போட்டியில் 85 கிலோ எடைக்குட்பட்ட நாமக்கல்  மாவட்டம் முழுவதும் இருந்து 30க்கும் மேற்பட்ட அணி கள் பங்கேற்றன. இதில் முதலிடம் பிடித்த யுபி பிரதர்ஸ்  உழவர்பட்டி அணிக்கு ரூ.10 ஆயிரமும், இரண்டாம் இடம் பிடித்த கரிகாலன் வெங்கரை அணிக்கு ரூ.7 ஆயிர மும், மூன்றாம் இடம் பிடித்த வாலிபர் சங்க கொல்லப் பட்டி அணிக்கு ரூ.4 ஆயிரமும், நான்காம் இடம் பிடித்த  கரிகாலன் காவேரி ஆர்.எஸ். அணிக்கு ரூ.3 ஆயிரமும்  வழங்கப்பட்டன. மேலும், வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டன. பரிசு வழங் கும் நிகழ்விற்கு வாலிபர் சங்க முன்னாள் கிளைத்  தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு  உறுப்பினர்கள் கோபி, ஹரிஷ் ஆகியோர் முன்னிலை வைத்தார். திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ. ஆர்.ஈஸ்வரன், சிபிஎம் ஆண்டிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஏ.ஆதிநாராயணன், சிபிஎம் நகர செயலாளர் எஸ்.சீனிவாசன், திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு, திமுக 31 ஆவது வார்டு கவுன்சிலர் முருகேசன்,  சிபிஎம் நகக்குழு உறுப்பினர்கள், சிஐடியு தலை வர்கள் செல்லம்மாள், தேவராஜன், வீரமணி உட்பட பலர்  கலந்து கொண்டனர்.