tamilnadu

img

நவம்பர் புரட்சி தினக் கூட்டம்

சிபிஎம் போராட்டம்: துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு வழங்கல்

நாமக்கல், நவ.17- துண்டிக்கப்பட்ட மின் இணைப் பை வழங்கினால் மட்டுமே காத் திருப்புப் போராட்டத்தில் இருந்து விலகுவோம் என மார்க்சிஸ்ட் கட்சி யினர் கூறியதால், அதிகாரிகள் உட னடியாக நிலத்திற்கான மின் இணைப்பை வழங்கினர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் ஒன்றியம், ஆயக்காட் டூர் பண்ணைக்காடு கிராமத்தில் தங் கராசு என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கான மின் இணைப்பை பெற்று, கடந்த 2011 ஆம் ஆண்டு  முதல் பயன்படுத்தி வந்தார். கடந்த  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனி நபர் ஒருவர் விவசாய நிலத்தில் தனக்கும் பங்கு உள்ளதாகக்கூறி வழக்கு தொடுத்ததால், தங்கராசு நிலத்தின் மின் இணைப்பு துண்டிக் கப்பட்டது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்கராசு தனக்கு மின் இணைப்பு வழங்க  வேண்டும் என தொடர்ந்த வழக் கில், நீதிமன்றம் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்த விடாமல், எதிர் தரப்பை சேர்ந்த சதீஷ், சுந்தரி, உள்ளிட்டோர் அரசு  அதிகாரிகளை தடுத்து வந்துள்ள னர். இதுகுறித்து உரிய நடவடிக்கை யை காவல்துறையும், மின்சார வாரி யம் எடுக்க வேண்டும். எதிர்மனு தாரர்களுக்கு சாதகமாக செயல்படு வதை கைவிட வேண்டும். உயர்  நீதிமன்றம் விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும் என  அறிவித்தும், உத்தரவை மதிக்கா மல் காலதாமதம் செய்யும் மின் வாரியத்தை கண்டித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்க ளன்று எஸ்பிபி காலனி துணைமின்  நிலைய அலுவலகம் முன்பு காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பி னர் சரவணன் தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோ கன், ஒன்றியச் செயலாளர் லட்சு மணன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ரவி, ஒன்றியக்குழு உறுப்பி னர் நவீன் உள்ளிட்டோர் கண்டன  உரையாற்றினர். காலை தொடங்கி  மாலை 3 மணி வரை காத்திருப்புப்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வெப்படை காவல் நிலைய ஆய் வாளர் சங்கீதா, எஸ்.பி.பி துணை  மின் நிலைய அலுவலர் ஆகி யோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதில், மின் இணைப் பை வழங்கினால் மட்டுமே போராட் டத்தில் இருந்து விலகுவோம் என உறுதியாக போராட்டக்குழுவினர் கூறியதால், விவசாயி தங்கராசுக்கு  நிலத்திற்கான மின் இணைப்பு உட னடியாக வழங்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி கிளை செயலாளர்கள் வர்க்க வெகுஜன அமைப்புகளை சேர்ந்தவர்கள் என  ஏராளமானோர் கலந்து கொண்ட னர். கோரிக்கை வெற்றியடைந் ததை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் கலைந்து சென்ற னர்.