பூட்டிக்கிடக்கும் கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், நவ.17- மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டு, பூட்டிக்கிடக் கும் கழிவறையை உடனடி யாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், தொப்பபட்டி ஊராட்சி அம்மன் கோவில் பின்புறம் அண்ணா நகரில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் 2019-20 ஆம் நிதியாண்டில் சமுதாய கழிவறை கட்டப்பட் டது. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கழி வறை, தற்போது வரை திறக்கப்படாமல் தண் ணீர் வசதி இன்றியும், புதர்மண்டியும் காணப் பட்டது. இதனால் மீண்டும் மராமத்து பணிகள் என்ற பெயரில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவழித்து, பணிகள் மேற்கொள் ளப்பட்டும் மீண்டும் புதர்மண்டி பாம்பு உள் ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாடும் இடமாக வும், சமூக விரோத செயல்கள் நடப்பதற்கு வழிவகுக்கும் இடமாக மாறியுள்ளதால் மக்கள் மிகுந்த அச்சமும், வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர். தண்ணீர் வசதியின்றி, புதர் மண்டி காணப் படும் கழிவறை பயன்பாட்டில் இல்லாததால், அப்பகுதி பொதுமக்கள் சுகாதார சீர் கேட்டால் பல்வேறு நோய்களுக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைக்கு கார ணமான ஊராட்சி மன்ற செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பராமரிப்பு பணிக ளுக்கு ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் ஆகி யோர் மீது உரிய வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவறை யை தூய்மை செய்து, தண்ணீர் வசதி ஏற்ப டுத்தி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தொப்பபட்டி ஊராட்சி மன்ற அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவ ரும், கட்சியின் கிளைச் செயலாளருமான இ. குப்பண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.டி.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் வி.பி.சபாபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, ஒரு வார காலத்திற்குள் கழிவறையை திறக்கா விட்டால், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். முடி வில், நித்யா நன்றி கூறினார்.
