பிங்க் ரோந்து வாகனம்: மாணவி மீட்பு
கோவை, நவ.17- கோவையில் பெண்கள் பாதுகாப்பிற்காக ‘பிங்க் ரோந்து வாகனம்’ அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே நாளில் கல்லூரி மாணவி மீட்கப்பட்டதால், காவல் துறைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். கோவையில் கல்லூரி மாணவி கும்பல் பாலியல் வன்கொடுமைக்குள்ளான விவகாரம் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய நிலையில், அதில் தொடர்புடைய வர்கள் சுட்டு பிடிக்கப்பட்டனர். இந்நிலையில், பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிலையில் சனியன்று “பிங்க் ரோந்து வாகனம்” அறிமுகப்படுத்தப்பட்டது. இந் நிலையில், கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் பகு தியில் ஞாயிறன்று இரவு சிறப்பு உதவி ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லூரி மாணவி ஒரு வர் வழி தெரியாமல் நின்று கொண்டிருந்ததை பார்த்த போலீசார், விசாரணை நடத்தினர். அதில் அவர் சேலம் பகுதியை சேர்ந்தவர் என்றும், தந்தை திட்டியதால், கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுவெளியே வந்ததாக வும், வேறு எங்கு செல்வது? என்று தெரியாமல் நின்றது தெரிய வந்தது. இதையடுத்து, காவல் துறையினர் அந்த பெண்ணை மீட்டு கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த கல்லூரி மாணவிக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு, மாணவியின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, மாண வியை காவல் துறையினர் பெற்றோரிடம் பத்திரமாக ஒப் படைத்தனர். பெண்கள் பாதுகாப்பிற்காக, ரோந்து வாக னம் அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த நாளே காணா மல் போன கல்லூரி மாணவி கோவையில் மீட்கப்பட்ட சம்பவம் அரங்கேரி உள்ளது. பிங்க் ரோந்து வாகனம் பொதுமக்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிஎம் போராட்டம் அறிவிப்பு பூட்டிக்கிடந்த சுகாதார வளாகம் திறப்பு
நாமக்கல், நவ.17- கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி போராட் டம் அறிவித்த நிலையில், அதிகாரிகள் சுகா தார வளாகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே ஏழூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இக்கிராமத்தின் தெற்கு தெருவில், சமு தாய சுகாதார வளாகம் ரூ.7,85,000 மதிப் பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆறு மாத காலமாக திறக்கப்படாமல் இருந் தது. அரசு அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இதனால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சியினர் அறிவித்திருந்தனர். இந்நிலை யில் திங்களன்று அதிகாரிகள் சுகாதார வளா கத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தொடர் முயற்சியால் சுகா தார வளாகம் திறக்கப்பட்டதால், பொது மக்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பாராட்டும், நன்றிகளையும் தெரிவித்தனர்.
இன்று மின்தடை
ஈரோடு, நவ.17- ஈரோடு மாவட்டம், வில் லரசம்பட்டி துணை மின் நிலையத்தில் செவ்வா யன்று பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இத னால் பாரதியார் நகர், சூளை, அன்னை சத்யா நகர், முதலி யார் தோட்டம், மல்லி நகர், ஈபிபி நகர், கந்தையன் தோட்டம், விஜிபி நகர், ரோஜா நகர், பாரி நகர், செல்வம் நகர், கீதா நகர், கணபதி நகர், முருகேசன் நகர், இந்திரா காந்தி நகர், இந்து நகர், வில்லரம்பட்டி சன் கார்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப் பட்டுள்ளது.