tamilnadu

img

நியாய விலைக் கடை திறப்பு விழா என்று கூறி மூன்றாவது முறையாக திறக்கப்படாத அவலம்

நியாய விலைக் கடை திறப்பு விழா என்று கூறி மூன்றாவது முறையாக திறக்கப்படாத அவலம்

சேலம், நவ.17- ‘நியாய விலைக் கடை திறப்பு விழா’ என்று கூறி மூன்றாவது முறையாக திறக்காமல், அதிகாரி கள் அலட்சியமாக நடந்து கொள்ளு வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பக்கநாடு ஊராட்சியிலுள்ள ஆனைப்பள்ளம் பகுதியில், ஊரக  வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை யின் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ், 13 லட்சத்து  16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2023 - 2024 ஆம் ஆண்டில்  பகுதி நேர நியாயவிலைக்கடை புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட் டது. அதன் திறப்பு விழா இதுவரை  நடைபெறவில்லை. கடந்த ஓராண் டில் இரண்டு முறை இந்த கட்டிடம்  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்று கூறி அதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்து, பல்வேறு காரணங்களால் திறப்பு  விழா நடைபெறாமல் நின்றது. அதே போல நவ.17 ஆம் தேதியன்று (திங் களன்று) திறப்பு விழா நடைபெறும் என்று வாழை மரங்கள், சீரியல்  லைட், நாற்காலிகள் போடப்பட்டு,  முன்னேற்பாடு பணிகள் நடை பெற்று வந்தது. அதனை நம்பி திறப்பு விழாவில் பங்கேற்க பொது மக்கள் கூடிய போது, திடீரென மூன்றாவது முறையாக திறப்பு விழா ரத்து என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்ததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், ஆனைப்பள் ளம் பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ள னர். தங்களுக்கு ரேசன் பொருட் கள் வேண்டுமென்றால், சுமார் 4  கிலோ மீட்டர் கடந்து மேட்டுத் தெரு பகுதிக்கு சென்று வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதற்காகத்தான் தங்கள் பகுதி யில் பகுதி நேர நியாய விலைக்  கடை வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஊராட்சித் துறையின் சார்பில் புதிய கட்டிடம்  கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், அதனை பொதுமக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வராமல் அதி காரிகள் அலட்சியப்படுத்துகின்ற னர். எனவே, இந்த பகுதி நேர நியாய  விலைக் கடை கட்டிடத்தை உடனடி யாக திறக்க வேண்டும், என்றனர்.