அரசுப்பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு மாணவர், வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உதகை, நவ.17- சுள்ளிகூடு அரசு உயர் நிலைப்பள்ளியில் அடிப் படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி மாணவர், வாலிபர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நீலகிரி மாவட்டம், கோத் தகிரி அருகே உள்ள சுள்ளி கூடுஅரசு உயர்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், அடிப்படை வசதி களின்றி மாணவர்கள் நாள்தோறும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பள்ளி யில் சுத்தமான குடிநீர், முறையான கழிப் பறை வசதி மற்றும் கழிப்பறைக்கான மேற் கூரை அமைக்க வேண்டும். விளையாட்டு மைதானம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரமான மதிய உணவு சமைக்க வேண்டும் என வலியு றுத்தி திங்களன்று இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் குமரன் தலைமை வகித்தார். இதில் வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மணிகண்டன், தாலுகா செயலாளர் கனிவாளன், மாணவர் சங்க தாலுகா செயலாளர் சுகந்தன், கிளைத் தலை வர் அஜாக், செயலாளர் கார்த்திக் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளர் ஜீவானந்தன் தலைமையிலான போலீசார், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என தெரிவித்தனர். ஆனால், ஆர்ப் பாட்டம் உறுதியுடன் நடைபெற்றதால், போலீ சார் சமரசம் செய்ய முயன்றனர். அப்போது, சம்பந்தப்பட்ட துறையினருடன் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
