world

img

தீக்கதிர் உலக செய்திகள்

5 பாலஸ்தீனச் சிறுவர்கள் சுட்டுக் கொலை

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரை யில் கடந்த ஒரு வாரத்தில் 5 பாலஸ்தீன சிறுவர் கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பாலஸ்தீன பொது சிவில் விவகார ஆணையத்தின் தகவல்படி, கொலை செய்யப்பட்ட சிறுவர்களது உடல்களை இஸ் ரேல் ராணுவம் ஓப்படைக்க மறுத்து வருகிறது. மேலும் மருத்துவக் குழுக்கள் அந்த உடல்களை அணுகுவதை தடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேற்கு கரையில் ஆலிவ் அறுவடை துவங்கியுள்ளது. இச்சூழலில் இஸ்ரேல் ராணுவமும் பாலஸ்தீனர்களின் இடத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலியர்களும் வன்முறை களை கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர். 

அமெரிக்க ராணுவத் தளத்திற்கு  ஈக்வடார் மக்கள் எதிர்ப்பு 

ஈக்வடாரின் பசிபிக் கடற்கரையில் உள்ள மான்டா பகுதியில் அமெரிக்கா மீண்டும் தனது ராணுவத்தளத்தை அமைக்க முயற்சி செய்து வரு கிறது. இது தொடர்பாக அந்நாட்டில் நடந்த பொது வாக்கெடுப்பில் சுமார் 60 சதவிகித மக்கள் அமெரிக்காவின் ராணுவத்தலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஈக்வடார் ஜனாதிபதி டேனி யல் நோபோ தீவிரமான  டிரம்ப் ஆதரவாளராக உள்ள நிலையில் மக்களின் இந்த முடிவு அவருக்கு எதிராகவும் திரும்பும் என கூறப்படுகிறது. இந்த தளத்தின் மூலமாக அமெரிக்கா போதைப்பொருட் களை கடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கோ : அரசு ஆயுதக்குழுவுக்கு இடையே ஒப்பந்தம் 

கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் ராணுவத் ்துக்கும் எம்23 என்ற ஆயுதக்குழுவுக்கும் இடையே உள்நாட்டுப்போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீண்ட காலமாக நீடித்து வரும் இந்தப் போரை  முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசுக்கும் ஆயுதக்குழுவுக்கும் இடையே ஒரு அடிப்படைக் கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என கத்தார் அறிவித்துள்ளது. இந்த அடிப்படைக் கட்டமைப்பு ஒப்பந்தம், விரிவான அமைதி ஒப்பந் தத்தை நோக்கி செல்ல ஆதார ஆவணமாகச் செயல்படும் எனவும் கத்தார் தெரிவித்துள்ளது.

சிலி ஜனாதிபதி தேர்தல்  கம்யூனிஸ்ட் வேட்பாளர் முன்னிலை 

சிலி ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்குப் பதிவு நவம்பர் 16  ஞாயிற்றுக்கிழமை  நடை பெற்றது. இதில் ஜீனட் ஜாரா 26.85 சதவீத வாக்கு களையும் ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் 23.93 சதவீத வாக்குகளையும்   பெற்றுள்ளனர். இருவரும் இரண்டாம் சுற்றுத்  தேர்தலை சந்திக்க உள்ளனர். தென் அமெரிக்க நாடுகளில் கடந்த இரண்டு ஆண்டு களில் அர்ஜெண்டினா மற்றும் பொலிவியாவில் தீவிர வலது சாரிகள் வெற்றி பெற்றுள்ள நிலையில் இத்தேர்தலில் ஜீனட் ஜாரா வெற்றி பெற வேண்டும் என அவருக்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றன.

அமெரிக்காவுக்கு டிரினிடா  ராணுவப் பயிற்சி  

அமெரிக்கா கரீபியன் பகுதியில் உள்ள தனது நட்பு நாடான  டிரினிடாவுடன் இணைந்து  கூட்டுராணுவப் பயிற்சியை மேற்கொள்கிறது. இது போர்ப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இது ஒரு பொறுப்பற்ற செயல் என்று வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடுமையாகக் கண்டித்துள் ளார். போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கூறி இதுவரை அக்கடல் பகுதியில் 70 க்கும் மேற்பட்ட நபர்களை படுகொலை செய்துள்ளது அமெரிக்கா. அதில் டிரினிடா நாட்டை சேர்ந்தவர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்த வங்கதேச நீதிமன்றம்!

டாக்கா, நவ. 17 - வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.  ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் நிலையில், அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வங்கதேச அரசு கூறியுள்ளது. வங்கதேசத்தில், கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டம் பின்னர், அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் பெரும் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையிலும் துப்பாக்கிச் சூட்டிலும் 1400 பேர் வரை பலியானதாக கூறப் பட்ட நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு, இந்தியாவிடம் தஞ்சம் புகுந்தார். இதனிடையே, ஷேக் ஹசீனா மீது மனித குலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டு, நீதிபதி கோலம் மோர்டுசா தலைமையி லான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் பல மாதங்க ளாக விசாரணை நடத்தி வந்தது. அதைத்தொ டர்ந்து ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அறிவித்த வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், ஹசீனாவுக்கு மரண தண்டனையும் விதித்துள்ளது. முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ் மான் கான் கமலுக்கும் மரண தண்டனை விதிக் கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்ட முன்னாள் காவல் துறைத் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. 2025 பிப்ரவரி மாதம் வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. இந்தத் தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தீப்பைத்  தொடர்ந்து அந்நாட்டில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப் படலாம் என அபாயம் நிலவுவதால் நாடு முழுவதும்  பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. உள்நோக்கம் கொண்ட தீர்ப்பு - ஹசீனா  “தமக்கு எதிரான தீர்ப்புகள் பாரபட்சமானவை மற்றும் அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டவை. இது ஜனநாயக ரீதியாக தேர்ந்தெ டுக்கப்படாத அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு மோசடி தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போராட்டம் நடந்தபோது நாங்கள் கட்டுப்பாட்டை இழந்தோம். எனவே அதனை மக்கள் மீதான முன்கூட்டிய திட்டமிட்ட தாக்குதல் என்று வகைப்படுத்த முடியாது” என்று இத்தீர்ப்புக்கு  ஷேக் ஹசீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.