world

img

சவுதி அரேபியா பேருந்து விபத்து - 45 இந்தியர்கள் உயிரிழப்பு?

சவுதி அரேபியாவின் மெக்கா-மதீனா நெடுஞ்சாலையில் டீசல் ஏற்றி சென்ற லாரி மீது போருந்து மோதிய விபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. 
சவுதி அரேபியாவின் மெக்கா-மதீனா நெடுஞ்சாலையில் முஃப்ரிஹாத் அருகே இன்று அதிகாலை 1.30 மணியளவில் டீசல் ஏற்றி சென்ற லாரி மீது போருந்து மோதிய விபத்துக்குள்ளானது. இதில் 45 இந்தியர்கள் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. ஒருவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பேருந்தில் பயணித்த பயணிகள் பெரும்பாலானோர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றது.
விபத்தில் சிக்கியவர்கள் குறித்து தகவல்களை பெற ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை 8002440003 (Toll free), 00966122614093, 00966126614276, 00966556122301 (WhatsApp) ஆகிய எண்ணைகளில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.