india

img

SIR பணிச்சுமையால் ராஜஸ்தானிலும் ஒருவர் தற்கொலை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்ட மேலும் ஒருவர் பணிச்சுமைக் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் நஹ்ரி கா பாஸ் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் முகேஷ் ஜாங்கிட் (45) என்பவர். இவர் வாக்குச்சாவடி நிலை அதிகாரி (BLO) பொறுப்பும் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணியின் அழுத்தத்தால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதுதான் தற்கொலைக்கு காரணம் எனவும் அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர். 
இதேபோல் நேற்று கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக (BLO), SIR பணியில் ஈடுபட்ட பள்ளி ஊழியர் அனீஸ் ஜார்ஜ்(44) என்பவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட நிலையில், மேலும் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.