6 கோடிக்கும் மேல் படிவங்கள் விநியோகம் எனத் தகவல் சென்னை, நவ.16- தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 54 ஆயிரத்து 300 படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது. நவம்பர் 4 முதல் 16 வரை 93.67 சதவீத எஸ்.ஐ.ஆர். படிவங்கள் மக்களிடம் சென்றடைந்துள் ளன. புதுச்சேரியில் 94.10 சத வீதமான 9,61,297 படிவங் கள் விநியோகிக்கப்பட் டுள்ளதாக தேர்தல் ஆணை யம் தெரிவித்துள்ளது.
நவ.19-இல் பிரதமர் மோடி கோவை வருகை கோயம்புத்தூர், நவ. 16- தென்னிந்திய இயற் கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் கோவை, கொடிசி யாவில் தென்னிந்திய அள விலான இயற்கை விவசா யம் தொடர்பான மாநாடு நவ ம்பர் 19 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பேசு கிறார். மேலும், இயற்கை வேளாண் விஞ்ஞானிகளு டன் அவர் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநாடு நடைபெற உள்ள கொடிசியா மைதானம், கோ வை விமான நிலையம், பிரத மர் வந்து செல்லும் பாதை உள்ளிட்ட இடங்களில் மாந கர போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.