tamilnadu

img

மதவாதிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்; வளர்ச்சி அரசியலை முன்னெடுப்போம்!

மதவாதிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்;  வளர்ச்சி அரசியலை முன்னெடுப்போம்! 

மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி  மதுரை, டிச. 7 - மதவாதிகளின் ஆரோக்கியமற்ற அரசியல் சூழ்ச்சிகளை முறியடித்து வளர்ச்சி அரசியலை மட்டுமே முன்னெடுப்போம் என சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழங்கினார். தனது உரையில், கடந்த நான்கரை ஆண்டுக்கால திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்ட அவர், மதவாதிகளுக்கும், ஒன்றிய அரசுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தார். டிசம்பர் 7 ஞாயிறன்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகத்தை துண்டாடும் சதிச் செயல்கள் நிச்சயமாக ஆன்மீகம் அல்ல என்றும் குறிப்பிட்டார். வளர்ச்சி அரசியலுக்கு எதிராக ‘வேறு அரசியல்’ கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியை விமர்சித்த முதலமைச்சர், தமிழ்நாட்டை மீட்டு, உலகமே திரும்பிப் பார்க்கின்ற அள வுக்கு முற்போக்கான மக்கள் நலத் திட்டங் களை நிறைவேற்றியுள்ளதாகக் குறிப்பிட் டார். எதிர்க்கட்சிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் முழிப்பதாகவும், வயிற்றெரிச் சலில் ஆரோக்கியமற்ற அரசியல் சூழ்ச்சி களைச் செய்து பார்ப்பதாகவும் சாடினார். “நாம் வளர்ச்சி அரசியலைப் பேசினால், அவர்கள் ‘வேறு’ அரசியலைப் பேசுகிறார் கள். அவர்கள் எத்தனை சூழ்ச்சி செய்தா லும், அத்தனையும் நாங்கள் முறியடிப் போம்! இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டா லினிடம் அந்த ‘பாச்சா’ எல்லாம் பலிக்காது!” என அவர் உறுதியடக் கூறினார். மதுரையை அலட்சியப்படுத்தும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் முதலமைச்சர் ஸ்டாலின், மதுரைக்கு மத்திய பா.ஜ.க. அரசு அளித்த வாக்குறுதி களையும், தி.மு.க. அரசின் சாதனைகளை யும் ஒப்பிட்டுப் பேசினார். கலைஞர் நூற்றாண்டு நூலகம்: சொன்ன  காலத்திற்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டு இலட்சக்கணக்கானோர் பயன்பெறுவதைச் சுட்டிக்காட்டினார். எய்ம்ஸ்: பத்து வருடங்களுக்கு முன்  அறிவிக்கப்பட்டும், இதுவரை வராத ஒன்றிய பா.ஜ.க.வின் எய்ம்ஸ் மருத்துவ மனையைச் சாடினார். கீழடி ஆய்வு: கீழடி அகழ்வாராய்ச்சியைத் தடுக்கப் பார்த்த பா.ஜ.க.வை விமர்சித்த முதலமைச்சர், தங்கள் அரசு கீழடி அருங்காட்சியகத்தை அமைத்து உலகெங் கும் இருந்து பார்வையாளர்களை ஈர்ப்ப தாகக் கூறினார். மெட்ரோ ரயில் புறக்கணிப்பு: “மதுரைக்கு மெட்ரோ ரயில் வேண்டும் என்று நாம் கேட் டால், அதை வேண்டாம் என்று சொல்கிறார் கள்” என ஒன்றிய அரசு நிராகரித்ததற்குக் கண்டனம் தெரிவித்தார். பா.ஜ.க. ஆளும் வட மாநில நகரங்களில் மெட்ரோவுக்கு அனு மதி அளித்துவிட்டு, மதுரைக்கு மறுப்பதை ‘இளக்காரமாக இருக்கிறதா?’ என ஆவேச மாகக் கேள்வி எழுப்பினார். ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் ‘மலிவான அரசியல்’ சமீபத்தில் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீபம்  ஏற்றுவது தொடர்பான சர்ச்சைக்கு முத லமைச்சர் பதிலளித்தார். ஆன்மீகம் என்பது மன அமைதியைத் தந்து, மக்களை ஒற்று மையாக இருக்க வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். “ஒரு சிலருடைய அர சியல் இலாபங்களுக்காக பிரிவுகளையும், பிளவுகளையும் உண்டாக்கி, சமூகத்தைத் துண்டாடும் சதிச்செயல்கள் நிச்சயமாக ஆன்மீகம் இல்லை! அது அரசியல்! அதி லும் கேடுகெட்ட மலிவான அரசியல்!” எனச் சாடினார். தங்கள் அரசு 1,490 நாட்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்கோயில் களுக்கு குடமுழுக்கு நடத்தி, ஆன்மீக உண ர்வுக்கு உரிய முக்கியத்துவம் அளித்திருப்ப தாகப் பெருமையோடு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “எங்களு டைய வளர்ச்சிப் பயணத்தை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நீங்கள் எப்படி பந்து வீசினாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் அது அடிப்பது சிக்சர்தான்!” என்று கூறி, 2026-லும் ‘அதே  ஃபயருடன், எமது அரசுதான் தொடரும்’ எனத் தனது உரையை நிறைவு செய்தார்.