சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே
உச்சநீதிமன்றம் தெரு நாய்கள் நலன் குறித்து நடவடிக்கை எடுக்கிறது. அதே போல வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாகவும் உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர்கள் தான் ஜனநாயகத்தின் முக்கிய தூண்கள்.
மூத்த பத்ரிக்கையாளர் ராணா அய்யூப்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய கர்ப்பிணிப் பெண் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் எல்லையைத் தாண்டி வெளியேற்றப்பட்டார். வங்கதேச சிறையில் 6 மாதங்கள் துன்பம் அனுபவித்த பிறகு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இறுதியாக தனது தாயகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளார். இதுதான் ஜனநாயக ஆட்சி.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா
வாக்குகளை திருட எஸ்ஐஆர் அமல்படுத்தியதால் இதுவரை 35 தேர்தல் அலுவலர்கள் இறந்துள்ளனர்; தில்லியில் காற்று மாசுபாடு உச்சத்தில் உள்ளது. டாலருக்கான ரூபாய் மதிப்பு 90ஆக கடந்துள்ளது. ஆனால் பாஜக இதனையெல்லாம் புறந்தள்ளிவிட்டு புதிய தொழிலாளர் சட்டங்கள் மீது இவ்வளவு முன்னரிமை கொடுப்பது ஏன்?
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்
சோதனையாக பீகாரில் எஸ்ஐஆர் மூலமாக என்ஆர்சி-ஐ மேற்கொண்டது. அங்கு பாஜகவிற்கு சாதகமான முடிவு கிடைத்தது. அதனால் மேற்குவங்கம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் என்ஆர்சி-ஐ மேற்கொண்டு வருகிறது. என்ஆர்சி - எஸ்ஐஆர் மூலமாக வாக்குகளை நீக்குவது தான் பாஜகவின் சதி.
