tamilnadu

img

தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழக மீனவர்கள்

தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழக மீனவர்கள்

நாகப்பட்டினம், டிச.7 - எல்லை தாண்டியதாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு, இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகும் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் நாகை மீனவர்கள் 31 பேர், தங்களை மீட்கக் கோரி உற வினர்களுக்கு வீடியோ அனுப்பியுள்ளனர். நாகை நம்பியர் நகரைச் சேர்ந்தவர் பாரி (40). இவ ருக்கு சொந்தமான விசைப்பட கில் அதே பகுதியைச் சேர்ந்த  பாண்டியன் (45), உதயகுமார் (40), ஆகாஷ் (25) உள்ளிட்ட 10 மீனவர்கள், அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த ஆனந்தகுமார் (42) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆனந்தகுமார் மற்றும் விஜயகுமார் (35), தமிழ்ச்செல்வன் (30), இளங் கோவன் (50), கணேசன் (40), சபரிநாதன் (19) உள்ளிட்ட 10  மீனவர்கள் அக்.30 ஆம்  தேதியும், நாகை அக்கரைப் பேட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜா (54) என்பவ ருக்குச் சொந்தமான விசைப் படகில் ராஜா மற்றும் க.ராஜா (58), செல்வமணி (31), ரவி (60) உள்ளிட்ட 10 மீனவர்கள் அக்.31 அன்றும் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். இவர்கள் நவ.3 ஆம் தேதி கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படை யினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இந்த 3 விசைப்படகுகளில் இருந்த 31  மீனவர்களை கைது செய்து  இலங்கை சிறையில் அடைத் தனர். இந்நிலையில், நவ.17 ஆம் தேதி இலங்கை பருத்தித் துறை நீதிமன்றத்தால் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.  இதையடுத்து, மீனவர் கள் 31 பேரும் விரைவில் நாடு திரும்புவர் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், தற்போது வரை அவர்கள் இலங்கையில் இருந்து இந்தியா அழைத்து வரப்படவில்லை. இதனால், மீனவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தங்களை மீட்டு தாயகம் கொண்டு செல்ல இந்திய தூத ரகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி, மீனவர்கள் இலங்கை யில் இருந்து வீடியோ பதிவு களை நாகையில் உள்ள அவர்களது உறவினர் களுக்கு அனுப்பி உள்ளனர். தமிழக அரசுக்கு பரிந்துரை இதுகுறித்து நாகப்பட்டி னம் மாவட்ட மீன்வளத் துறையினர் கூறுகையில், “நாகை மீனவர்களை மீட்டு தாயகம் கொண்டு வர ஆட்சி யர் மூலம் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளோம். டிட்வா புயலால் இலங்கையில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால், நாகை மீனவர்களை மீட்க  கால தாமதமாகிறது. விரை வில் மீனவர்கள் மீட்கப்பட்டு, சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.