ரூ.78,000 கோடியை சூறையாட மோடி அரசு திட்டம்?
தில்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில்,”நாட்டின் மொத்த வங்கிக் கணக்குகளில் சுமார் ரூ. 78,000 கோடி ரூபாய் அளவுக்கு உரி மைக் கோரப்படாத பணம் இருக்கிறது. ஆனால் அந்தப் பணத்திற்கு உரியவர்கள் என்று யாரும் வந்து என் பணம் என்று முறையாக உரிமை கோரவில்லை. அவர்கள் இதுவரை திரும்பப் பெற வில்லை. இந்த பணத்தில் கணிசமான பகுதி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சேமிப்பாக இருக்கலாம். அது அப்ப டியே இருக்கிறது. எனவே அவர்களை தேடிக் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக, நாடு முழுவதும் குறைந்தது 500 மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் காப்பீட்டு நிறுவனங்களில் ரூ.14,000 கோடி மற்றும் டிவிடெண்டுகளில் ரூ. 9,000 கோடி பணத்திற்கும் உரிமை கோரப்படவில்லை. இந்தப் பணம் அனைத்துக்கும் எந்த உரிமையாளரும் இல்லை” என்று கூறினார். உரிமைக் கோரப்படாத பணம் தொடர்பாக வங்கிகள், காப்பீட்டு நிறு வனங்கள் இதுவரை அறிவிப்பு வெளி யிட்டது இல்லை. ஆனால் பிரதமர் மோடி புள்ளிவிபரத்துடன் கூறியுள்ளனர். ஒரு வேளை 500 மாவட்டங்களில் அமைக்கப் படும் சிறப்பு முகாம்களில் யாரும் பணத்தை உரிமை கோரவில்லை என்றால், அந்த பணத்தை மோடி அரசு கையகப்படுத்துமா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.
