tamilnadu

img

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநிலப் பேரவை

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநிலப் பேரவை

மதுரை, டிச. 8 - தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 16வது மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவை மதுரையில் டிச. 7 மற்றும் டிச. 8 தேதிகளில் நடை பெற்றது. மாநிலத் தலைவர் ச. பால கிருஷ்ணன் தலைமையில் நடை பெற்ற இப்பேரவையின் இரண்டாவது நாள் நிகழ்வுகள் ஞாயிறன்று நிறை வடைந்தன. பேரவையின் முக்கிய நிகழ்வாக, மகளிர் துணைக்குழு சார்பில் கருத்த ரங்கம் நடைபெற்றது. இக்கருத்த ரங்கிற்கு மகளிர் துணைக்குழு மாநில அமைப்பாளர் கா. தேவி சோனா தலைமை வகிக்க, தென்மண்டல எல்ஐசி உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக் குழு அமைப்பாளர் ஆர்.எஸ். செண்பகம் “தடைகளை தகர்ப் போம் – சரித்திரம் படைப்போம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும், தமிழ்நாடு அரசு கூட்டுற வுத்துறை ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் என். இளங்கோவன் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செய லாளர் சு. கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பேரவையின் நிறைவாக, தென் மண்டல இன்சுரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பு முன்னாள் பொதுச் செய லாளர் க. சுவாமிநாதன் “அரசு ஊழி யர்களும் பொதுமக்களும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  நிர்வாகிகள் தேர்வு தொடர்ந்து, ச. பாலகிருஷ்ணன் தலைவராகவும், ரா. நவநீத கிருஷ்ணன் பொதுச் செயலாளராக வும், பி. விஜயன் பொருளாளராகவும் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந் தெடுக்கப்பட்டனர். க. சந்திரபோஸ், சிங்காரவேலன், விஜயராமலிங்கம், சாம் டேனியல், கோவிந்தராஜ், சதீஷ்குமார் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், கீதா ஸ்ரீ, பல்ல வராஜ், வினோத் ராஜ், ராஜீவ் பாண்டி, சிவச்சந்திரன், மூவேந்திரன் ஆகியோர் மாநிலச் செயலாளர் களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.