tamilnadu

img

தமுஎகச மாநில மாநாடு எழுச்சியுடன் நிறைவு மதிப்புறு தலைவராக திரைக்கலைஞர் ரோகிணி தேர்வு

தமுஎகச மாநில மாநாடு எழுச்சியுடன் நிறைவு மதிப்புறு தலைவராக திரைக்கலைஞர் ரோகிணி தேர்வு

தஞ்சாவூர், டிச. 7 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாடு தஞ்சாவூரில் ஞாயிறன்று எழுச்சியுடன் நிறைவு பெற்றது. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  தமுஎகச மதிப்புறு தலைவராக திரைக்கலைஞர் ரோகிணி, தலைவராக மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளராக களப்பிரன், பொருளாளராக சைதை ஜெ, துணைத் தலைவர்களாக சு.வெங்கடேசன், ஆதவன் தீட்சண்யா, நா.முத்துநிலவன், க.உதயசங்கர், ஆர்.நீலா,  பிரளயன், துணைப்  பொதுச்செயலாளர்களாக கே.வேலா யுதம், அ.லட்சுமிகாந்தன் வெண்புறா, உமா, அ.கரீம், கி.அன்பரசன்,  துணைச் செயலாளர்களாக மருதுபாரதி,  மணிமாறன், அ.உமர் பரூக், மேட்டூர் வசந்தி, கரிசல்  கருணாநிதி, ஹேமாவதி மற்றும்  அருணன், சிகரம் செந்தில்நாதன், ச.தமிழ்ச்செல்வன், மயிலை பாலு  உள்ளிட்ட 44 செயற்குழு உறுப்பினர்களை உள்ளடக்கிய 149 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்வு செய்யப் பட்டது.