tamilnadu

100 நாள் வேலையிலிருந்து 27 லட்சம் பேர் நீக்கம்!

100 நாள் வேலையிலிருந்து 27 லட்சம் பேர் நீக்கம்!

சென்னை, நவ. 17 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: “அக்டோபர் 10 - நவம்பர் 14-க்கு இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் மட்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பயனாளிகள் 27 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காரணம் என்ன தெரியுமா? கேஒய்சி விபரம் கொடுக்கவில்லையாம்.  நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, வேலை நாட்களை குறைப்பது, பயனாளிகள் எண்ணிக்கையை குறைப்பது, கடைசியாக இந்த 100 நாள் வேலை திட்டத்தையே ஒழித்து கிராமப்புற ஏழைகளை பட்டினி போட்டுக் கொல்வது என்பதுதான் பாஜக ஆட்சியின் நீண்ட கால செயல்திட்டம். ஏழைகளுக்கு எதிரான ஒன்றிய பாஜக ஆட்சிக்கு எதிராக மக்களே கிளர்ந்து எழுவீர்” என தெரிவித்துள்ளார்.