உம்ரா புனிதப் பயணத்தின் போது பேருந்து விபத்து சவூதியில் இந்தியர்கள் 45 பேர் உடல் கருகி பலியான துயரம்!
ரியாத், நவ. 17 - சவூதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில், மதீனாவுக்கு ‘உம்ரா’ புனிதப் பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் 45 பேர் உடல் கருகி பலியாகினர். பயணிகள் அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தை, சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகமும் உறுதி செய்திருக்கிறது. மெக்காவிலிருந்து மதீனாவுக்கு (உம்ரா) புனிதப்பயணம் வந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, மதினாவிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் டீசல் டேங்கர் லாரி மீது மோதியதால் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணம் செய்தவர்களில் ஒரே ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள் ளார். 45 பேர் உடல் கருகி பலியாகினர். உயிர் பிழைத்த முகம்மது அப்துல் ஷோயப் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து, இந்திய வெளியுற வுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமது ‘எக்ஸ்’ பக்கத்தில், “மதீனாவில் இந்தியர் கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளான நிகழ்வை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந் தேன். ரியாத்தில் உள்ள நமது தூதரக மானது, சவூதி தூதரக அதிகாரிகளுடன் பேசி வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின ருக்கு அரசு முழு ஆதரவை அளிக்கும். அவர் களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். இந்த விபத்தைத் தொடர்ந்து, ஜெட்டா வில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 8002440003 என்ற உதவி எண்ணும் வழங்கப் பட்டுள்ளது. முதலமைச்சர் இரங்கல் சவூதியில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 45 இந்திய உம்ரா பயணிகள் உயிரி ழந்த துயரச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும், பலியானவர்களின் குடும்பங் களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள் ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அவர் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
