பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகள்; சிபிஎம் கருத்துரு அரசிடம் அளிப்பு!
சாலைகளில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தொடர்ந்து, இந்த பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்களை, கட்சியின் மாநிலச்செயலாளர் பெ. சண்முகம், செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் ஆகியோர், அரசின் தலைமைச்செயலாளர் நா. முருகானந்தத்திடம் கடிதமாக அளித்தனர்.
