‘பாகிஸ்தான் ராணுவம் கூறியது பொய் ; 214 ராணுவ வீரர்களையும் கொன்றுவிட்டோம்’
பாகிஸ்தான் நாட்டின் தென் மேற்கு மாகாணமான பலு சிஸ்தானின் குவெட்டா பகுதியில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் பகு திக்கு மார்ச் 11ஆம் தேதி ஜாபர் எக்ஸ் பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் 9 பெட்டி களில் 450 பயணிகள் இருந்தனர். இந்த ரயிலை பாகிஸ்தானிடமிருந்து பலு சிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் “பலுச் விடுதலை இராணுவம் (BLA)” என்ற பிரிவினைவாத அமைப்பு கடத்திச் சிறைப் பிடித்தது. ரயிலைக் கடத்து வதற்கு முன்பு தண்டவாளத்தை வெடிக் கச் செய்திருந்தது. இந்த குண்டு வெடிப்பில் 30 ராணுவ வீரர்கள் உயிரி ழந்ததாக பலுச் விடுதலைப் படை யினர் தெரிவித்திருந்தனர். மேலும் தங்கள் வசம் 214 பேர் பிணைக் கைதிகளாக (பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்) இருப்பதாகவும், பாகிஸ்தான் சிறையில் இருக்கும் பலுச் ஆதரவாளர்களை 48 மணி நேரத்திற் குள் விடுவிக்க வேண்டுமென பலுச் கிளர்ச்சியாளர்கள் எச்சரித்திருந்தனர். சந்தேகம் ஆனால் பாகிஸ்தான் ராணு வம்,”ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை மீட்டு விட்டோம். பலுச் - பாகிஸ்தான் ராணு வம் என இருதரப்பினர் இடையே நடை பெற்ற துப்பாக்கி சண்டையில் 33 பலுச் தீவிரவாதிகளைக் கொன்று பிணைக் கைதிகளாக இருந்த 214 ராணுவ வீரர் கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்” என அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் ராணுவ வீரர்கள் மற்றும் ரயிலை மீட் டது தொடர்பாக எந்த வீடியோக்களை யும், புகைபடங்களையும் பாகிஸ்தான் ராணுவம் வெளியிடவில்லை.
இத னால் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் 214 ராணுவ வீரர்கள் மீட்பு குறித்து பாகிஸ்தான் எதிர்க்கட்சியினர் மற்றும் ஊடகத்தினர் பலருக்கும் சந்தேகத்தை எழுப்பியிருந்தனர். 214 வீரர்களும் படுகொலை இந்நிலையில், பாகிஸ்தான் ராணு வம் கூறியது பொய்யானவை என்று கூறி பலுச் விடுதலைப்படை சனி யன்று இரவு அறிக்கை வெளியிட்டது. அதில்,”நாங்கள் 214 பணயக்கைதி களையும் கொன்றுவிட்டோம். பாகிஸ்தான் சிறையில் உள்ள தங்கள் குழுவினரை விடுவிக்க வலியுறுத்தி 48 மணிநேரம் கெடு விதித்தோம். ஆனால் இதுதொடர்பாக அரசுத் தரப் பில் யாரும் முன்வராததால் பிணை யக்கைதிகளில் இருந்த 214 ராணுவ வீரர்களையும் கொன்று விட்டோம்” என பலுசிஸ்தான் விடுதலைப்படை தெரி வித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக் பலூச் விடு தலைப் படை செய்தித் தொடர்பாளர் ஜியான் பலூச் கூறுகையில், “பாகிஸ் தான் பிடிவாதத்தின் விளைவாக 214 பணயக்கைதிகளும் கொல்லப்பட்ட னர். இது பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஒரு பெரிய தோல்வி” என அவர் கூறி னார். 236 பேரின் கதி என்ன? ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது மக்கள், ராணுவ வீரர்கள் என மொத்தம் 450 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் 214 ராணுவ வீரர்களை கொன்று விட்டோம் என பலுச் விடு தலைப்படை அறிவித்துள்ளது. அப்படி என்றால் மீதமுள்ள 236 பேரின் கதி என்ன ஆனது என இதுவரை தெரிய வில்லை. குறிப்பாக ரயிலை கடத்து வதற்கு முன்பு பலுச் விடுதலைப்படை தணடவாளத்தில் நடத்திய வெடி குண்டு தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் இறந்தார்கள். இந்த 30 வீரர்கள் ரயிலில் பயணித்த 450 பேரின் பட்டியலில் இருந் தவர்களா? என்பது தொடர்பாகவும் தெளிவான தகவல் எதுவும் வெளி யாகவில்லை.